3-வது அநுபந்தம் - आधानம்.
1. आधानம் - என்னும் கர்மத்தினாலே கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்கினி என்கிற அக்கினிகளுக்கு ஸம்ஸ்காரம் செய்யப்படுகிறது. அதினாலே அவைகள் வேதத்தில் சொல்லப்பட்ட வியாபாரங்களுக்கு தகுந்தவைகளாய் ஆகின்றன. ஆதாநம் ஸ்வதந்திரமான கர்மம்; ஒரு யாகத்துக்கும் அங்கமன்று. இப்படி ஏற்பட்ட அக்கினிகளை வெவ்வேறு வேதவாக்கியங்கள் அந்தந்த யாகங்களுக்கு உபயோகப் படுத்துகின்றன.
2. ஆதாநத்தைச் செய்யும் விதம் - முதல் முதல் அரணிகளைக் கொண்டுவர வேண்டியது. அரணி என்பது அரசமரத்தின் வயிரமான துண்டு. அரணிகள் இரண்டு வேண்டியது. ஒன்றுக்கு पूर्वारणि என்றும், மற்றொன்றுக்கு उत्तरारणि என்றும் பெயர். பிறகு संभारங்களைக் கொண்டு வரவேண்டியது. संभारங்கள் என்றால் - ஏழுவிதமான பூமியின்பதார்த்தங்களும், ஏழுவிதமான ஓஷதிகளும் (மரம்செடிகள்). அவைகளில் பூமியின் பதார்த்தங்களாவன- மணல், ஊஷரமண், எலிவளைமண், கரையான் புத்துமண், ஜலம் வற்றாத குளத்தின் அடியிலிருக்கும்சேறு, பன்றி மூக்கினால் கல்லினமண், சுக்கான் கல்லுகள். தங்கத் துண்டுகளும் வேண்டும். ஓஷதிகளாவன - அரசு, அத்தி, புரசு, வன்னி, விகங்கதம், இடிவிழுந்த மரம் - இவைகளின் கிளைகளும், தாமரை இலைகளும். இவைகளைக் கொண்டுவந்து, ஒரு இடத்தில் வைக்கிறது. பிறகு யாகபூமியைக் கொத்தி, மேல் மண்ணை எடுத்துவிட்டு புரோக்ஷிக்கிறது. யஜமாநன் க்ஷௌரம் செய்து கொண்டு, ஸ்நாநம் செய்து, பட்டு வஸ்திரம் கட்டிக் கொள்ள வேண்டியது. பத்திநியும் ஸ்நாநம் செய்து, பட்டுச் சேலையைக் கட்டிக் கொள்ள வேண்டியது. आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-1,2,3
3. இவைகள் காலைவேளை வியாபாரங்கள். மத்தியாநத்துக்கு மேல் யஜமாநன் ஔபாஸநம் செய்து கொண்டிருந்த அக்கினியை இரண்டு பாகமாகப்பண்ணி, ஒன்றைத் தினந்தோறும் ஔபாஸநம் செய்வதற்காக வைத்துக் கொண்டு, மற்றொன்றை கார்ஹபத்திய அக்கினியை வைக்கப்போகும் இடத்துக்கு மேற்கே வைக்க வேண்டியது. இதில் ब्रह्मौदनம் என்று சொல்லப்படும் அந்நத்தை पाकம் செய்ய வேண்டியது. இப்படிச் செய்வதற்கு अर्धाधानம் என்றுபெயர். आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-2.ஔபாஸநாக்கினி முழுவதைக்கொண்டு ஆதாநம்பண்ணும் பக்ஷமும் உண்டு. இந்த விதமான ஆதாநத்திற்கு பூர்ணாதாநமென்று பெயர். பூர்ணாதாநமானது கலியில் நிஷித்தமான படியால், அதை இப்போது செய்கிறதில்லை.
4. அன்று ராத்திரி இரண்டாவது யாமத்தில் வைக்கப்பட்ட அக்கினியில் ब्रह्मौदनத்தை पाकம் பண்ணுகிறது. பண்ணும் விதம் - நாலு शरावம் (வாணாய்) கொள்ளும் तण्डुलத்தை (அரிசியை) நிர்வாபம் செய்ய வேண்டியது. நிர்வாபமந்திரத்தில் अग्नये என்கிற சொல்லுக்குப்பதிலாக முதல் தடவையில் ब्रह्मणे प्राणाय என்றும் இரண்டாவது தடவையில் ब्रह्मणेऽपानाय என்றும், மூன்றாவது தடவையில் ब्रह्मणे व्यानाय என்றும், கடைசித் தடவையில் ब्रह्मणे என்றும் சொல்ல வேண்டியது. எடுத்த அரிசியை நாலு பாத்திரங்களில் ஜலத்தைச் சேர்த்து அவைகளில் पाकம் பண்ணுகிறது. அரிசி முழுவதும் மலர்வதற்கு முன்னே பாத்திரங்களைக் கீழே இறக்கி, நிறைய நெய்யைச் சேர்த்து. அந்த நெய்யிலிருந்து கொஞ்சம் दर्विயில் எடுத்துக்கொண்டு, அக்கினியில் ஹோமம் செய்து, மூன்று பச்சையான ஸமித்துக்களை நெய்யில் தோய்த்து, ஒவ்வொன்றாய் அக்கினியில் சேர்க்க வேண்டியது. பிறகு செய்த அந்நத்தைக் கொண்டு நாலு ருத்துவிக்குகளை போஜநம் செய்விக்கவேண்டியது. அக்கினியை ராத்திரி யஜமாநன் அணைந்து போகாமல் ரக்ஷிக்கவேண்டியது. விருதத்துடன் இருக்க வேண்டியது. (आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5,- कण्डिका-5,6,7)
5. விடியற்காலத்துக்கு சற்று முன்னே (उपव्युषम्) அரணிகளை அக்கினியில் காய்ச்சுகிறது. அவைகளில் அக்கினிதேவதை ஏறிவிடுகிறார். அக்கினியை उद्वासनம் செய்து (அணைத்துவிட்டு) அரணிகளை அத்வர்யு யஜமாநனிடம் கொடுக்கிறான். அவைகளை அவன் வாங்கிக்கொண்டு, அபிமந்திரணம் செய்கிறான் (க-8). பிறகு கார்ஹபத்திய அக்கினியை வைக்கவேண்டிய இடத்தைக் கொத்தி, புரோக்ஷிக்கிறது. இப்படியே மற்ற இரண்டு அக்கினிகளை வைக்க வேண்டிய இடங்களிலும் செய்கிறது. பிறகு संभारங்களைக் கொண்டுவந்த வரிசைப்படி அந்த இடங்களில் சேர்த்து, அவைகளைப் பரப்புகிறது. இதைச் செய்யும் விதம் - ஒவ்வொன்றில் பாதியை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு பாதியைக் கார்ஹபத்திய அக்கினியின் இடத்திலும், மற்றொரு பாதியைத் தக்ஷிணாக்கினியின் இடத்திலும் சேர்க்கிறது. மீதியிருப்பதை ஆஹவநீயத்தின் இடத்தில் சேர்க்கிறது. மண், மணல்களை பரப்பின பிறகு, மரத்தின் கிளைகளையும் இந்த இடங்களில் கொண்டு வந்த வரிசைப்படி வைக்கிறது. இதற்காக ஒவ்வொருமரத்திலிருந்து நாலுகிளைகளையும், நாலுதாமரை இலைகளையும் கொண்டுவர வேண்டியது. கார்ஹபத்தியத்தின் இடத்தில் ஒவ்வொரு கிளையையும், ஒரு தாமரை இலையையும், தக்ஷிணாக்கினியின் இடத்தில் ஒவ்வொரு கிளையையும் ஒருதாமரை இலையையும், ஆஹவநீயத்தின் இடத்தில் இரண்டு கிளைகளையும், இரண்டு தாமரை இலைகளையும் வைக்க வேண்டியது. கடைசியில் எல்லாத்துக்கும் மேலே ஒரு தங்கத் தகட்டை ஒவ்வொரு இடத்திலும் வைக்கிறது. आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-9,10
6. இதன் பிறகு ब्रह्मौदनाக்கினி இருந்த இடத்தில் சாம்பலைத் தள்ளி, அதில் அரணிகளைக் கடைகிறது. அப்போது ஒரு குதிரை கிட்ட இருக்கவேண்டியது. அக்கினி உண்டான பிறகு, யஜமாநன் அபிமந்திரணம் செய்து, அதின்மேலே மூச்சு விடவேண்டியது. அதை அத்வர்யு अञ्जलिயால் (சேர்ந்த கைகளால்) எடுத்து, பத்த விட்டு, கார்ஹபத்தியத்தின் இடத்தில் கிழக்கு முகமாய் உட்கார்ந்து கொண்டு சேர்க்கிறான். இதை சூரியன் உதிப்பதற்கு முன்னாலே செய்யவேண்டியது. பிறகு ஆஹவநீயத்தின் இடத்துக்கு அக்கினியைக் கொண்டு போவதற்காகத் தணல்களை எடுத்துவைத்து, ஆக்கினீத்திரன் வேறு தணல்களை எடுத்துக்கொண்டு, தக்ஷிணாக்கினியின் இடத்துக்கும் போய், அவைகளை அதில் உட்கார்ந்து கொண்டு சேர்க்கிறான். आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-11,12.
7. எடுத்து வைத்த அக்கினியை ஆஹவநீயத்தின் இடத்துக்குக் கொண்டுபோகும் விதம் - அத்வர்யு வழியை மூன்று பாகங்களாகப் பண்ணிக்கொண்டு, முதல் பாகத்தில் அக்கினியை முழங்கால் உயரத்திலும், இரண்டாவது பாகத்தில் தொப்புள் உயரத்திலும், கடைசி பாகத்தில் வாய் உயரத்திலும் வைத்துக் கொண்டு போகிறான். அவனுக்குத் தென்புறத்தில் ஒரு குதிரை கூடப்போகிறது. {(1) குதிரையைக் கொண்டு போவதற்குக் காரணம் - முன்னாலே கார்ஹபத்தியமும், ஆஹவநீயமும் ஒன்று மற்றொன்றின் வேலைகளை ஆசைப்பட்டனவாம். அவைகளின் இடங்களுக்கும் நிலையில்லை. பிரஜாபதி என்பவர் குதிரையின் உருவத்தை எடுத்துக்கொண்டுவந்து, இந்த கலகத்தை தீர்த்தாராம். ஆகையால் அவர் ஸ்தாநத்தில் குதிரை கார்ஹபத்தியத்திலிருந்து, ஆஹவநீயத்துக்குப் போய், ஒரு நிலையான ஏற்பாட்டைச் செய்து திரும்பி வருகிறது. குதிரை இல்லாவிட்டால், வெள்ளாட்டை வைத்துக் கொள்ளலாம். (2) குதிரை பசு. அதின் பின்னாலே அக்கினி போனால், அதை அக்கினியினிடம் கொடுத்ததாக ஆகும். யஜமாநனுக்கு பசுக்கள் இல்லாமல் போய்விடும் (तैत्ति.ब्रा.1, प्रश्नः-1, अनु.5, पञ्चा-40,41,42). யாகபூமிக்குத் தென்புறத்தில் பிரும்மா ஒரு வண்டிச்சக்கரத்தை மூன்று தடவை சுற்றும் வரையில் நடத்திக்கொண்டு போகிறான். ஆஹவநீயத்தினிடம் போனபிறகு குதிரையை கிழக்கே கொண்டுபோய், அதின் வலது காலாலே ஸம்பாரங்களின் வடபாகத்தைத் தொடும்படி செய்கிறது. அத்வர்யு அக்கினிக்குக் கீழ்புறத்தில் மேற்கு முகமாய் நின்று கொண்டு, அக்கினியை குதிரையின் கால்பட்ட இடத்தில் சேர்க்கிறான். குதிரையைத் திருப்பிமேற்கே கொண்டு வர வேண்டியது. இதைச் சூரியன் பாதி உதித்தபின் செய்யவேண்டியது. இப்படி ஆதாநமானபிறகு ஸமித்துக்களை ஒவ்வொரு அக்கினியிலும் மூன்று தடவை நெய்யை எடுத்துக் கொண்டு, பூர்ணாஹுதியைச் செய்கிறது. கடைசியில் யஜமாநன் उपस्थानம் (ஸ்தோத்திரம் பண்ணுவது) செய்கிறான். இத்துடன் ஆதாநம் முடிகிறதுआप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-13,14,15,18.
8. இதின் பிறகு ஆறு யாகங்கள் செய்யப்படுகின்றன. அவைகளாவன - (1) அக்கினி - எட்டுக்கபால புரோடாசம்; (2) பவமாநன் என்னும் அக்கினி, பாவகன் என்னும் அக்கினி. சுசி என்னும் அக்கினி - இவர்கள் மூன்று பேர்களுக்கும் திரவியம் எட்டுக்கபால புரோடாசங்கள்; (3) இந்திராக்கினி - பதினொரு கபால புரோடாசம்; அதிதி - சரு. இவைகளைச் சேர்த்தும் செய்யலாம்; அல்லது ஒவ்வொரு கூறை தனித்தனியாய் சொன்ன வரிசைப்படியும் செய்யலாம். இரண்டாவது கூறு யாகங்களுக்கு நிர்வாபம் செய்யும்போது, முதல் யாகத்துக்குத் தனியாகவும். மற்ற இரண்டுக்கும் சேர்த்தும் செய்யவேண்டியது. மூன்றாவது கூறில் அரிசியை நெய்யில் போட்டு சருவைச் செய்ய வேண்டும். அதை ஹோமம் செய்த பிறகு, மீதியை, चतुर्धाकरणமில்லாமல், பிரும்மாவுக்குக் கொடுக்க வேண்டியது.आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-5, कण्डिका-19,21,22).
9. இரண்டாவது, மூன்றாவது கூறு யாகங்களை பனிரெண்டு நாள் கழித்துச் செய்கிற பக்ஷமுமுண்டு. [இஷ்டிகளை நிறுத்திவைப்பதற்குக் காரணம் - அவைகளை உடனே செய்வதால், அவைகள் பசுப்போலிருப்பதாலும், அக்கினி ருத்திரனாய் (அதாவது குரூரனாய்) இருப்பதாலும், பசுக்களை ருத்திரனிடம் கொடுத்ததாக ஆகும். பனிரெண்டு நாள் கழித்தால், அவன் சாந்தனாய் விடுவான். (तैत्ति.ब्रा.अनु-6, प्रश्नः-50,51).] அப்போது ஆதாநத்துக்குப் பிறகு, இந்த இஷ்டிகள் ஆகிறவரையில் மந்திரமில்லாமல் ஹோமம் செய்து கொண்டு வரவேண்டியது. (तैत्ति.ब्रा.1, प्रश्नः-1, अनु-6).
Go Top