ஶ்ரௌதம் श्रीमते वेदान्तरामानुजमहादेशिकाय नमः முகவுரை. புத்தியுள்ளவன் ஒரு வேலையைச் செய்யும் போது, இதினால் ஒரு ப்ரயோஜநம் உண்டாகுமா? இது இல்லாமலிருந்தால், என்ன வருத்தம் இருந்தது? என்று யோசிக்க வேணும். அப்படியே இங்கேயும் ஒரு கேள்வி உண்டாகும் - இந்த ஶ்ரௌதத்தை எழுதுவதினால், என்ன பிரயோஜநம் கிடைக்கும்? அதை எழுதாமலிருந்தால், என்ன வருத்தமிருந்தது? இதை எழுதுவதினால், அது போகுமா? - என்று.

2. நாம் எல்லாரும் வேதத்தைப்பற்றி மிகுந்த கௌரவம் பண்ணுகிறோம். அது என்ன சொல்லுகிறது? நமக்கு அது என்ன உபகாரம் பண்ணுகிறது என்று தெரிந்து கொண்டோமா? பிராமணர்கள் முதலான மூன்று வர்ணத்தார்கள் தான் அதைப் படிக்கத் தகுந்தவர்கள். அவர்களுக்குள் எத்தனை பேர்கள் அதைப் படிக்கிறார்கள்? படிக்கிறவர்களுக்குள் எத்தனை பேர்கள் அதின் அர்த்தத்தை அறிந்திருக்கிறார்கள். வேதத்தின் அர்த்தத்தை அறிய முடியவில்லையே என்று சொல்ல முடியாது. வித்தி யாரண்ணியரென்கிற ஒரு பெரியவர் மூன்று வேதங்களுக்கும் எளிதான நடையில் வியாக்கியாநம் எழுதியிருக்கிறார். அதைத் தேவநாகர எழுத்தில் நன்றாய் அச்சிட்டிருக்கிறார்கள். இவ்வளவு உதவியிருந்தும், தமிழ் தேசத்தில் எத்தனை பேர்கள் வேதத்தின் அர்த்தத்தை அறிந்திருக்கிறார்கள். அந்த அர்த்தத்தைச் சுருக்கமாக யாராவது எழுதியிருக்கிறார்களோ, தெரியவில்லை. கல்பஸூத்திரத்தை எழுதின ருஷிகளும், யாகங்களைச் செய்கிற கிரமப்படி எழுதுயிருக்கிறார்கள். வேதத்தில் இருக்கும் சொற்களையே அவர்கள் உபயோகப்படுத்தி யிருப்பதினால், வேதத்துக்குப்போல், அவைகளுக்கும் வியாக்கியாநம் வேண்டியிருக்கிறது. வியாக்கியானமும் ஸம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதினால், அந்த பாஷை தெரியாதவர்களுக்கு அவைகளால் பிரயோஜநம் கிடையாது. ஆகையால் எல்லோரும் வேதத்தில் சொல்லிய ஸங்கதிகளைப் பிரயாஸமில்லாமல் தெரிந்து கொள்ளுவற்காக, இது எளிதான தமிழ்நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இது முதலாவது பிரயோஜநம்.

3. இன்னுமொரு பிரயோஜநமும் உண்டு. வேதத்தின் அர்த்தத்தை அறிவதில் சில ஸந்தேஹங்கள் உண்டாகின்றன. அவைகளைத் தீர்ப்பதற்காக இரண்டு ருஷிகள் விசாரம் செய்து, விசாரத்தை ஸூத்திரங்களாக எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஜைமிநி என்பவர் வேதத்தின் முன்பாகத்தையும், பாதராயணர் என்கிற வியாஸர் பின்பாகத்தையும் விசாரித்தார்கள். அவர்கள் எழுதின ஸூத்திரங்களுக்கு பூர்வமீமா ம்ஸா ஸூத்திரங்கள் என்றும், உத்திரமீமாம்ஸா ஸூத்திரங்களென்றும், பிரும்மஸூத் திரங்கள் என்றும் பெயர். வெகுபேர்கள் பிரும்மஸூத்திரங்களுக்கு ஏற்பட்ட பாஷி யங்களைப் படிக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் பூர்வமீமாம்ஸா சாஸ்திரத்தையும் படிக்கிறார்கள். அந்த சாஸ்திரத்தில் ஏற்பட்ட நியாயங்களைப் பிரும்ம ஸூத்திரம் பண்ணின வியாஸரும், அதற்கு வியாக்யாநம் பண்ணின பாஷியகாரர்களும் உபயோகப்படுத்தியிருப்பதினால், அந்த சாஸ்திரத்தைப் படிக்காமல், பிரும்மஸூத்திர பாஷியங்களைப் படிக்கிறவர்களுக்கு விஷயங்கள் எப்படி மனதில் நன்றாகப்படும்?. பூர்வமீமாம்ஸா சாஸ்திரத்திலும் வேதத்தில் சொல்லிய கர்மங்களைப் பற்றி விசாரிப்பதினால், கர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மீமாம்ஸா சாஸ்திரத்தையும், பிரும்மஸூத்திர பாஷியங்களையும் படிக்கிறவர்களுக்கு இதனால் உபகாரம் உண்டாகலாம். இது இரண்டாவது பிரயோஜநம்.

4. வேதம் இன்னத்தைச் சொல்லுகிறது என்று தெரியாமையால், வேதத்தை ஒப்புக்கொள்ளாத மேல்தேசத்தார் வேதத்தையும், வேதத்தின்படி நடக்கிற நம்மையும் பரிஹாஸம் பண்ணும்போது, பதில்சொல்லத் தெரியாமல் நாம் வெட்கப்படுகிறோம். அதிகபயமுள்ள சிலர் "ஸ்மிருதிகளையும், புராணங்களையும் தள்ளி விடவேண்டி யது; வேதமொன்றையே பிரமாணமாக வைத்து கொள்ளுவோம்" என்று சொல்லு கிறார்கள். வேறு சிலர் "வேதத்தை முழுவதும் தள்ளிவிட்டு, பிரும்மம் ஒன்றே இருப்பதாக நம்புவோம்" என்று சொல்லுகிறார்கள். இன்னும் சிலர் மேல்தேசத்தார் சொல்லும் ஆக்ஷேபங்கள் வராதபடி வேதத்துக்கே, ருஷிகள் எழுதின அர்த்தத்தைத் தள்ளிவிட்டு, புதிதாக அர்த்தம் எழுதிக்கொண்டு வருகிறார்கள். இவ்விதமான குறைவுகள் வேதத்தை உள்ளபடி அறிந்தால் தீரலாம். இது மூன்றாவது பிரயோஜநம்.

5. இந்த இடத்தில் வேதத்தைப் பற்றியும், அது சொல்லுகிற கர்மங்களைப் பற்றியும், அந்தக் கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற தேவதைகளைப் பற்றியும் மேல் தேசத்தார் பல ஆக்ஷேபங்களைச் சொல்லுகிறார்கள். அவைகளுக்கு ஸரியான பதி ல்களைச் சொல்லவேண்டியது. அவைகளில் முதலாவது ஆக்ஷேபம் .- நாம் பல தைவங்களைப் பூஜை செய்கிறோம். தங்களைப் போல ஒரே தைவத்தை நம்புகிறதில்லை - என்பது. நாம் பல தேவதைகளுக்குப் பூஜைசெய்து, அவர்களை ஸந்தோஷ ப்படுத்தி அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய பலன்களைப் பெறுகிறோம். இது உண்மையே. ஆனால் இவர்கள் தைவமன்று; தைவம் ஒன்று தான். தேவதைகள் மனிதர்களான நம்மைப்போல் கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள். முன் பிறப்புகளில் செய்த புண்ணியங்களாலே சில அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தைவம் அன்று என்பதற்கு ருஜு என்னவென்றால் - வேதத்தையே பார்ப்போம். தேவதைகளுக்கு யஜமாநன் இந்திரன். அவன் விருத்திரன் என்ற அஸுரனைக் கொன்ற காலத்தில், அவனுடைய இந்திரியங்களின் சக்தி போய்விட்டது. பிரும்மாவிடம் முறையிட்டுக் கொண்டான். அவர் பால் யாகத்தையும், தயிர் யாகத்தையும் செய்யும்படி உத்திரவு பண்ணினார். அவைகளால் அவனுக்கு சக்தி திரும்பி வந்து, திருப்தி உண்டாயிற்று (பாரா-10-குறிப்பு-பக்கம்-13). ஒரு காலத்தில் யாகம் பண்ணும்போது, ருத்திரன் என்கிற தேவதையை மறந்துபோய், அவனுக்கு ஹவிஸ்ஸைக் கொடுக்கவில்லை. அவன் கோபித்துக்கொண்டு, ஆதித்தியர்கள் என்கிற தேவதைகளை தொந்தரவு செய்தான் (பாரா-134-குறிப்பு-பக்கம்-131). மித்தி ரன் என்கிற தேவதை யாகங்களில் ஸரியாய் செய்யப் பட்டதற்கு யஜமாநன். வருண ன் என்கிற தேவதை கெடுதலாய் செய்யப்பட்டவைகளுக்கு யஜமாநன். இவர்கள் இருவரையும் யாகம் செய்கிறவன் ஸந்தோஷப்படுத்தாவிட்டால், நன்றாய்ச் செய்யப் பட்ட அங்கத்தை நன்றாய்ச் செய்யப்பட்டாத அங்கத்துடன் சேர்ப்பர்கள். அல்லது அங்கங்களை நன்றாய் செய்யாதபடி செய்வர்கள் (பாரா-144). இப்படி மனிதர்களைப் போல் சக்தியை இழக்கிறவர்களையும், கோபித்துக் கொள்ளுகிறவர்களையும், கெடு தல் செய்கிறவர்களையும் தைவம் என்று புத்தியுள்ளவன் எவன் சொல்லுவன்?. ஆகையினால் நம்மைப் பற்றி மேல் தேசத்தார் சொல்லும் குற்றத்துக்கு இடமே- யில்லை.

6. இதின் மேலே ஒரு கேள்வி - தேவதைகள் தைவமன்று என்று சொன்னீரே. அவர்களை ஏன் பூஜிக்கிறீர்கள் - என்று. நாம் அவர்களைக் கேட்போம். நம்முடைய ராஜா லண்டன் நகரத்திலும், அவருடைய பிரதிநிதி டில்லியிலும் இருக்கிறார்களே. நமக்கு வேண்டியவைகளைப்பற்றி அவர்களைக் கேட்காமல், கீழ் உத்தியோகஸ்தர்க ளை ஏன் கேட்கிறோம்? கிராமத்தில் தரிசு நிலத்தை ஸாகுபடிபண்ண ஆசைப்படுகிற வன் தாசில்தாருக்கு ஏன் மனு செய்து கொள்ளுகிறான் - என்று. அவர்கள் இப்படிப் பதில் சொல்லலாம் - ராஜாவின் பிரதிநிதிக்குக் கீழே உத்தியோகஸ்தர்களைப் படிப்ப- டியாக வைத்து, அவர்களுக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்து, அவைகளுக்குத் தகுந்தபடி அந்தந்த உத்தியோகஸ்தர்களுக்கு மனுசெய்து கொள்ளும்படி எற்பாடு செய்திருக்கிறது. ஆகையால் சில ஸங்கதிகளில் தாசில்தாரையும், சில ஸங்கதிகளில் கலெக்டரையும், சில ஸங்கதிகளில் கவர்னரையும், சில ஸங்கதிகளில் தாசில்தாரை யும், ஜனங்கள் கேட்கிறார்கள். இந்தப் பதிலை நாம் அவர்களுக்குத் திருப்பிச் சொல்ல வேண்டியது. தைவமானது நாலு முகமுள்ள பிரும்மா முதல் அனேகம் அதிகாரிகளை வைத்து, அவர்களுக்கு மனிதர்களைக் காட்டிலும் அதிகமான அறி வையும், சக்தியையும் கொடுத்திருக்கிறது. ஜனங்கள் அவர்களைப் பூஜைசெய்து, தங்களுக்கு வேண்டிய பிரயோஜனங்களை அடையட்டும் என்றும் ஏற்பாடு செய்திரு க்கிறது. இது வெறும் யுக்தியன்று. பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் இப்படியே சொல்லியிருக்கிறார். "பகவான் உலகங்களை மறுபடியும் உண்டுபண்ணி, அவர்க- ளுக்கு உடம்புகளையும், இந்திரியங்களையும் கொடுத்து .... யக்ஞங்களையும் ஏற்ப- டுத்தி, அவர்களைப் பார்த்து, இந்தக் கர்மங்களால் நீங்கள் க்ஷேமத்தை அடையு- ங்கள் .... எனக்கு உடம்புகளான தேவதைகளை இந்த யக்ஞங்களினாலே ஸந்தோஷ ப்படுத்துங்கள். யக்ஞங்களினால் ஸந்தோஷமடைந்த தேவர்கள் தாங்கள் மறுபடியும் ஸந்தோஷப்படுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுப்பர்கள்" என்று (भगव.गीता-अध्य-3,श्लोकः-10,11).

7. ஆனால் மனிதனான ராஜாவுக்கும் தைவத்துக்கும் வித்தியாஸமில்லையா? ராஜாவுக்கு எல்லாருடைய குறைகளைக் கேட்கமுடியாது. தைவத்துக்கு அப்படியன் று. அதற்கு எல்லாம் தெரியும். எதையும் செய்யச் சக்தியுண்டு. அதைத் தடுப்பார் ஒருவருமில்லை. ஆகையாலே எல்லாரும் அதையே கேட்கலாமே என்றால், பதில் - கேட்கலாம். ஆனால் தைவம் நமக்கு எது நல்லதோ அதையே செய்யும். ஒரு நல்ல தகப்பன் பிள்ளை கொய்யாப்பழம் வேணுமென்று கேட்டால், அதை வாங்கிக் கொடு ப்பதில்லை. புஸ்தகம் வேணுமென்றால், உடனே அதை வாங்கிக் கொடுக்கிறான். அதுபோல், ஒருவன் மோக்ஷம் வேணுமென்று முறைப்படி கேட்டால், கேட்ட காலத்தில் தைவம் அதைக் கொடுக்கிறது. இந்த உலகத்திலாவது, ஸுவர்க்கத்திலா வது அநுபவிக்கக்கூடிய ஸுகங்களைக் கேட்டால், உடனே கொடுக்கிறதில்லை. தைவத்தினுடைய இந்த அபிப்பிராயத்தைத் தெரியாமல், ஜனங்கள் எப்படியாவது தங்களுக்கு வேண்டிய பிரயோஜநங்களை அடைய முயற்சி செய்வர்கள். தகாத வழியில் போய் கெட்டுப் போவார்கள். இதை நினைத்து தேவதைகளுக்கு அதிகாரம் கொடுத்து, அவர்களைக்கொண்டு ஜனங்களுக்கு தைவம் திருப்திபண்ணிவைக்கிறது.

8. இரண்டாவது ஆக்ஷேபம் - தேவதைகள் என்பதே கிடையாது. அவர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஏதோ வேலைகள் செய்கிறதாகவும், வேதம் சொல்லு கிறது கட்டுக்கதை. உண்மையன்று - என்று. இதை மேல்தேசத்தார் மாத்திரம் சொல்ல வில்லை. நமக்குள் பூர்வமீமாம்ஸா சாஸ்திரக்காரர்கள் தேவதைகள் இருப்பதாகக் கொண்டு, அவர்களுக்கு உடம்புகளில்லை; அறிவில்லை; தேவதைகள் என்பது "அக்னயே, ஸோமாய""யாகம் செய்யத் தகுந் தவன் அதைச் செய்யாமையால் மழை பெய்யாமல், ஆஹாரமில்லாமல், ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள். அதைப்பார்த்து ருஷிகள் அவனைக் கெட்டவன் என்று வைகி றார்கள். அந்தக் குற்றத்தைப் போக்கவேண்டும்; வஸந்தருதுவில் யாகங்களைச் செய்விக்கவேண்டும்" என்று, யஜமானனுக்காக வேண்டிக் கொள்ளப்படுகிறது. (பாரா-131, குறிப்பு, பக்கம்-129). ஆதலால் பிராமணனான கிருஹஸ்தன் தனக்கு ஒரு லாபமில்லாமல் போனபோதிலும், ஊருக்காகப் பாடுபட வேண்டியது.

18. எந்தக்காரணத்தினால் பிராமணனான கிருஹஸ்தனிடத்தில் இந்தப் பொறுப் பை வைத்திருக்கிறது என்று ஒரு கேள்வி. பதில் - பிராமணனுக்கு ஸத்வ குணம் மேலிட்டு, மற்ற குணங்கள் அடங்கியிருப்பதால், விஷயங்கள் அவன் மனதில் நன்றாய் படும். தனக்காக ஒன்றைத் தேடமாட்டான். நல்ல வேலைகளைச் சோம்பலி ல்லாமல் ஸரியாக முடிக்கக்கூடும். இந்த ஸங்கதிகளை நினைத்து, பிராமணன் வேதத் தைப் படிக்கவேண்டும் என்றும், அயலாருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று ம், தான் யாகத்தைச் செய்யவேண்டும் என்றும், அயலாரைச் செய்விக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. உதாரணம் - ஒருவனுக்கு நாலு பிள்ளைகள் இருக்கிறா ர்கள். மூத்தவன் அறிவுள்ளவன்; கெட்டிக்காரன். மற்றவர்கள் அப்படியன்று. மூத்த வன் திரவியத்தை ஸம்பாதித்து குடும்பத்தை ரக்ஷிக்கவேண்டுமென்று தாயார் தகப்ப னார் ஆசைப்படுகிறார்கள். அதுபோல, இந்த ஸங்கதியை அறிந்து, வேதத்தில் கௌரவமுள்ள முன் இருந்த ராஜாக்கள் பிரம்மணர்கள் வயிற்றுக்காகப் பாடுபடக்- கூடாதென்று அவர்களுக்கு வேண்டிய மானியங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் படியும் செய்தார்கள். அப்போது தேசம் க்ஷேமமாயிருந்தது. ஒரு ராஜா சொன்னார் - என் தேசத்தில் திருடன் கிடையாது. அயல் புருஷனைத் தேடுகிற ஸ்திரீயுமில்லை - என்று. இப்போதிருக்கிற ராஜாங்கத் தாருக்கு நமது வேதத்தில் கௌரவமில்லை. பிராம்மணர்களை முன்போல ஆதரிக் கிறதில்லை. அவர்கள் வயிற்றுப்பாட்டுக்காக பாடுபடவேண்டியதாக ஆய்விட்டது. இப்படியிருக்க, ராஜாங்கத்தார் தங்கள் வேலைகளைச் செய்வதற்கு தகுந்தவர்கள் வேண்டுமென்று பள்ளிக்கூடங்களை வைத்து, பரீக்ஷை கொடுத்தவர்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னார்கள். பிராமணப்பிள்ளைகள் கூட்டக்கூட்டமாய் பள்ளிக்கூடங்களுக்குப் போய் படித்து, பரீக்ஷைகளில் தேறி, வேலைகளை அடைந் தார்கள். அது முதல் வேதத்தைப் படிப்பதும், யாகங்களைச் செய்வதும் வரவர குறைந்து போய் விட்டன. தேசத்துக்கு எப்படி க்ஷேமமுண்டாகும்?.

19. நித்தியமான யாகங்களைச் செய்வதினால் தேசத்துக்கு க்ஷேமமுண்டா வதுடன், அவைகளைச் செய்கிறவனுக்கும் ஒரு நல்ல பழக்கமுண்டாகிறது. அவைக ளைச் செய்யும்போது, தேவதைகளுடைய ஸந்தோஷத்துக்காக இதைச் செய்கிறேன் என்று எண்ணவேண்டியது. தனக்கு ஒரு பிரயோஜநத்தை நினைக்கக்கூடாது. தர்ப்ப த்தை அறுக்கும்போது. உன்னை தேவதைகளுக்காகக் கொண்டுபோகிறேன் என்றும், புரோடாசம் பண்ண நெல்லை எடுக்கும்போது, இன்ன தேவதைக்காக உன்னை எடுக் கிறேன் என்றும், யூபத்திற்காக மரத்தை வெட்டும்போது, தேவதைக்காக உன்னை வெட்டுகிறேன் என்றும், ஸோமக்கொடியை நசுக்க எடுக்கும்போது, இந்திரனுக்காக உன்னை எடுக்கிறேன் என்றும், மனதார நினைத்து, அந்த அர்த்தமுள்ள மந்திரங்- களை சொல்லவேண்டியது. இதுவும் தவிர, ஒவ்வொரு வியாபாரத்தையும் இன்ன தேவதை செய்விக்கிறது; நானாகச் செய்யவில்லை என்று எண்ணவேண்டியது. இந்த இரண்டு நினைவுகளுடன் ஒவ்வொரு வேலையையும் செய்வதினாலே, நான் எனக் காக இருக்கிறேன். நான் ஸ்வதந்திரன் என்கிற இரண்டு தப்பு எண்ணங்களும் வரவர த் தேய்ந்து போகும். ஸர்வேசுவரனான பகவான் எல்லா தேவதைகளுக்குள்ளே இரு ந்து, நாம் செய்யும் பூஜைகளைப்பெற்றுக்கொண்டு ஸந்தோஷமடைந்து, வேண்டிய பலன்களைக் கொடுக்கிறான் என்று உபநிஷத்துக்களாலே தெரிந்த பிறகு, நான் பகவானுக்காக இருக்கிறேன். நான் அவனுக்கு உட்பட்டவன் என்று தன்னுடைய ஸ்வரூபத்தை அறிவன். அப்போது அவனுடைய நிலையான இடத்துக்குப்போய், அவனுக்கு வேலை செய்வதில் ஆசையுண்டாகி, அவனிடம் போவதற்கு வேண்டிய முயற்சியைச் செய்வன். இது யாகங்களைச் செய்வதின் இரண்டாவது பிரயோஜநம்.

20. கீழ்ச்சொன்ன இரண்டு நினைவுகளுடன் கர்மங்களைச் செய்வற்காகப் பெரியோர்கள் ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறார்கள். அதை எல்லாரும் வாயால் சொல்லுகிறோம். அதின் அர்த்தத்தை நினைக்கிறதில்லை. மந்திரங்களின் அர்த்தம் தெரியாது. எதுவோ கர்மங்களைச் செய்கிறோம். பக்தியுடனும் செய்கிறதில்லை. இதைப் பார்த்த லௌகிகர்கள் இந்த கர்மங்களைச் செய்ய வேண்டியதில்லை. தேங் காயில் உள் இருப்பதை எடுத்துவிட்டபிறகு இருக்கும் ஒடுபோல் இப்போது செய்- யும் கர்மங்கள் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். ஆசாரியர்களாக வந்து உப தேசம் பண்ணுகிறவர்களும் "இவைகளைத் தள்ளிவிடுங்கோள்; உங்களுடைய தைவங்களை விட்டுவிடுங்கோள். ஒருவர் சொல்லுவதை நம்ப வேண்டாம். நீங்கள் யோஜித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளே இருக்கிற தைவத்தைத் தேடுங்கள்" என்று உரக்கச் சொல்லுகிறார்கள். அவர்களை நாம் கேட்போம். நமக்கு இருக்கிற இரண்டு தப்பு எண்ணங்கள் எப்படிப்போகும்? என்று. அவர்கள் இப்படி சொல்லக்கூடும் - தியானம் பண்ணு - என்று. மனது பழகின விஷயத்தில்கூட நிலையாயிருப்பதில்லை. நான் எனக்காக இருக்கிறேன்; நான் ஸ்வதந்திரன் - என்கிற எண்ணங்கள் கணக்கில்- லாத ஜன்மங்களில் பழக்கப்பட்டு, மிகவும் வலிமையுள்ளவைகளாயிருக்கின்றன. அவைகளுக்கு விரோதமாக இரண்டு நிமிஷமாவது தியானம் பண்ண முடியுமா? நமக்குக் கர்மங்களைச் செய்வதில்தான் பழக்கம். ஆகையினாலே கர்மங்களைச் செய்து கொண்டு, இந்த இரண்டு எண்ணங்களைப் போக்குவதுதான் லகுவானது என்று ஶ்ரீ கீதையில் 3-வது அத்தியாயத்தில் ஶ்ரீ கிருஷ்ணனாக அவதரித்த பகவான் மிகவும் தெளிவாய் அருளிச் செய்திருக்கிறார். ஆகையால் கர்மங்களில்லாமல் வெறும் தியானம் பிரயோஜநப்படாது. நீங்கள் வேறு கர்மங்களை இந்த காலத்துக்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்கிறோம் என்றும் சொல்லக்கூடாது. ஏற்பட்டிருக்கிற கர்ம- ங்களை விட்டு, புதிதாய் உண்டுபண்ணுவதற்கு என்ன நியாயமிருக்கிறது. மந்திரங்க- ளுக்கு அர்த்தம் தெரியவில்லை. ஜனங்களுக்குத் தெரிந்த எந்த பாஷையாலாவது புதிதாய் மந்திரங்களை ஏற்பாடு செய்யக்கூடாதா என்று கேட்கலாம். இதற்குப் பதில் - ஶ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரச் சுருக்கத்தின் முகவுரையில் 15-வது பாராவில் சொல்லி யிருக்கிறது. அதை இங்கே எழுதியிருக்கிறது - "மந்திரத்துக்கு ஒரு மஹிமையிருக் கிறது. நல்ல பாம்பின் விஷத்தை மந்திரத்தாலேயே விலக்குவது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி விஷத்தை இறக்குகிறவர்கள் எல்லாருக்கும் மந்திரத்- தின் அர்த்தம் தெரியுமென்று சொல்ல முடியாது. தமிழிலும், இந்துஸ்தானியிலும், இன்னும் அனேக பாஷைகளிலும் மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளைக் கொ- ண்டு வேறு வேலைகள் செய்யப்படுகின்றன. அந்த மந்திரங்களைச் சொல்லி வேலை செய்கிறவர்கள் உயர்ந்த ஜாதியாக இருக்கவேணுமென்று நிர்ப்பந்தமில்- லை. ஆகையால் மந்திரஙகளுக்கே இயற்கையாகவே ஒரு மஹிமையுண்டு. அர்த்- தம் தெரிந்தால் மிகவும் நல்லது தான். சிரத்தையின் குறைவால் ஸரியாகப் பண்ண- வில்லை. மிகவும் ருசிபார்த்து சாப்பிடுகிற ஒரு மனிதன் ஒன்றும் அகப்படாத ஸமயத்தில் அகப்பட்ட ஆஹாரத்தைச் சாப்பிடுகிறானல்லவா?. அதுபோல கொடு- மையான இந்தக் காலத்தில் அகப்பட்டதைக் கொண்டு ஸந்தோஷப்பட வேணும். வேலைகளை விட்டுவிடக்கூடாது. விருத்தி செய்ய முயற்சி செய்யவேணும். இங்கு ஒர் சிறிய கேள்வி - ஸந்தியாவந்தனம் முதலியவைகளை எந்த மந்திரத்தாலாவது செய்யக்கூடாதோ - என்று. பதில் - பிராம்மணர்களாக இருக்கும். நமக்கு ஏற்பட்ட மந்திரங்களை விட்டு, வேறு மந்திரங்களை எடுத்துக்கொள்வதற்கு என்ன நியாயம்? வேதத்திலும் ஸ்மிருதிகளிலும் சொல்லியிருக்கும் மந்திரங்களைச் சொல்லுவதில் என்ன கஷ்டம்? என்ன நஷ்டம்?. விடுவதில் யாருக்கு இஷ்டம்?. விடுவதில் என்ன லாபம்?. இதை விடு, அதைப்பிடி என்று சொல்வதற்கும், அப்படிக் கேட்பதற்கும், யாருக்கு என்ன பாத்தியம்? வைத்திய சாஸ்திரம் உடம்பிற்காக ஏற்பட்டது. வேதம் முதலான தர்மசாஸ்திரம் ஆத்மாவின் வியாதியைப் போக்கடிப்பற்கு ஏற்பட்ட வைத் திய சாஸ்திரம். உடம்பின் வைத்திய சாஸ்திரத்தில் துளித் தவரினால் நடுங்குகிறார்- களே; ஆத்மாவின் வைத்திய சாஸ்திரத்தைப் பலவிதமாய் குலைக்கிறார்கள். ஆத் மாவைத் தெரிந்து அதின் ஸௌக்கியத்தில் ஆசையில்லாமையால்தானே"?.

21. கீழ்ச்சொல்லியபடி வேதத்தில் சொல்லிய கர்மங்களைச்செய்வோம். வேதம் அக்கினிஹோத்திரத்தையும், தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளையும் விதிப்பதுடன் நிற்காமல், பசுயாகங்களையும் விதிக்கிறதே. பசுவைக் கொல்லுவது ஜீவஹிம்ஸை யல்லவா? அதை விதிக்கிற மதம் மிகவும் இளப்பமல்லவா? யக்ஞங்களுக்குள்ளே ஜபயஜ்ஞங்களும் உயர்ந்தது என்று ஶ்ரீகீதையிலேயே சொல்லவில்லையா? என்று மேல் தேசத்தாரும், இந்த தேசத்து லௌகிகர்களும் அடிக்கடி கேட்கிறார்கள். இந்த ஸங்கதியை நன்றாய் விசாரிக்கவேண்டியது. அவர்களைக் கேட்க வேண்டியது - ஆட்டைக் கொல்லுவது ஜீவஹிம்ஸை என்று எப்படித் தெரிந்தது என்று, வேதம் ஒரு பிராணியையும் ஹிம்ஸை பண்ணக்கூடாது என்று, சொல்லவில்லையா என்றால், அந்த வேதமே பசு யாகத்தை விதித்திருக்கிறதே. ஆகையாலே பசு யாகங்கள் தவிர, மற்ற ஹிம்ஸையைச் செய்யக்கூடாதென்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் பண்ண வேண்டியது. வேதத்தைப் பிரமாணமாகச் சொல்லவில்லை. என் மனதுக்குப் பிடிக்கவில்லை; அருவருப்பாயிக்கிறது என்று சொன்னால், மற்றவர்கள் எங்களுக்- குப் பிடிக்கிறது; எங்களுக்கு வேதத்தில் சொல்லியதைச் செய்வதில் அருவருப்பு இல்லை என்று பதில் சொல்லலாம். மேலும், ஒரு ஆட்டை தேவதைகளுக்காகக் கொல்லுவது ஹிம்ஸையென்று சொல்லுகிறீர்களே? வயல்களில் ஜலத்தைக்கட்டி, கலப்பையால் உழுது, நெல்லு சாகுபடி பண்ணுகிறீர்களே. கோடிக்கணக்கான எறும்பு களும், கரையான்களும், புழுக்களும் சாகவில்லையா ? பயிறுண்டான பிறகு களை எடுக்கிறீர்களே. அவைகள் ஜீவன்களல்லவா? நெல் பழுத்த பிறகு, அறுத்துக் கொண்டு வருகிறீர்களே. அவைகளும் ஜீவன்கள்தானே. நெல்லைக் கொண்டு வந்து குத்தி, கொதிக்கிற ஜலத்தில் போட்டு, சமையல் செய்கிறீர்களே. இதெல்லாம் எப்படி நியாயம். அவர்கள் பதில் சொல்லக்கூடும் - இவைகள் எல்லாம் ஜீவவகுப்பில் தாழ் ந்தவைகள் மனிதன் உயர்ந்தவன். அவனுக்காகத் தானே எல்லாம் ஏற்பட்டிருக்கி ன்றன - என்று. நாம் மறுபடியும் கேட்போம் - கொஞ்ச காலத்திற்கு முன்பு மேல் தேசத்தில் நடந்த சண்டையில் எத்தனை பேர்களைக் கொன்றீர்கள். இது எறும்பை யும், கரையானையும் கொல்லுவது போலவா? அவர்கள் பதில் - விரோதி அக்கிரம மாய் சண்டைக்கு வந்தான். தேசத்தை ரக்ஷிப்பதற்காக அவர்களைக் கொல்ல வேண்டியதாயிருந்தது. தர்மமான சண்டையில் இறந்துபோனவர்களுக்கு ஸுவர்க்- கம் கிடைக்கும் என்று உங்களுடைய ஶ்ரீ கீதையில் சொல்லவில்லையா - என்று. இதுவே பசு யாகத்தின் விஷயத்தில் நாம் சொல்லவேண்டிய பதில். ஒரு பசுவைக் கொல்லுவதாலே தேவதைகள் ஸந்தோஷப்பட்டு, தேசத்துக்கு க்ஷேமத்தைப் பண்ணு கிறார்கள். தேவதைகளுக்குப் பசுவைக் கொடுப்பானேன்; நெல்லினால் செய்யப் பட்ட புரோடாசத்தையோ, சருவையோ கொடுத்தால் போதாதா - என்று ஒரு கேள்வி. பதில் - பசித்திருக்கிறவனுக்கு சாதம் போடவேண்டும்; சந்தனத்தைப் பூசினால் ஸந்- தோஷமுண்டாகுமோ, ஆகையாலே எந்த எந்த தேவதைக்கு எதெது பிடிக்குமோ, அதைக் கொடுக்கவேண்டியது. வாயு தேவதைக்கு வெள்ளையான பசு பிடிக்குமாம். எந்தெந்த தேவதைக்கு எதெது பிடிக்குமென்றும், அதற்கு எந்த லக்ஷணம் இருக்க வேண்டுமெனறும் வேதம் அறிந்து, அதை நமக்குத் தெரிவிக்கிறது நமக்கு இது நேரே தெரியாதபடியாலே, வேதம் சென்னபடியே செய்யவேண்டியது.

22. பசுயாகவிஷயத்தில் வேதம் சொல்லுவதை அறிந்து கொண்டால், இந்த ஆக்ஷேபம் நிற்காது. பசுவைக் கொல்லுவதற்கு முன்னாலே, அதற்குச் சில ஸம்ஸ்கா ரங்கள் செய்யப்படுகின்றன. அவைகளில் உபாகரணம் என்பது ஒன்று. அதில் அத்வர்யு இச்சிமரத்தின் கிளையால் அதைத் தொட்டுக் கொண்டு. மூன்று மந்திரங்க ளைச் சொல்லுகிறான். அவைகளின் பொருளை 93(2)-வது பாராவில் (பக்கம் 88) சொல்லியிருக்கிறது. அதைப்பார்க்க. பசுவை சாமித்திரம் என்ற இடத்திற்குக் கொண்டு போய் விட்டு விட்டு திரும்பி வரும்போது, பசுவைப்பார்த்து யஜமானன் ஒரு மந்திரத்தைச் சொல்லுகிறான் அதின்பொருளை 95-வது பாராவில் சொல்லியிரு- க்கிறது. அதை (91-வதுபக்கம்) பார்க்க. உபாகரணத்திற்குப் பிறகு சில ஹோமங்கள் செய்யப்படுகின்றன. அப்போது சொல்லப்படும் ஐந்து மந்திரங்களின் பொருளையும் 93-வது பக்கத்தில் குறிப்பில் பார்க்கலாம். இந்த யாகத்தில் பசுவின் உடம்பிலிருந்து வபை என்பதை எடுத்து, முழுவதையும் ஹோமம் செய்ய.

Go Top
Click here to Main Page