13. सर्वपृष्ठेष्टि - இதற்கு தேவதைகள் - राथन्तरன் என்கிற இந்திரன்; बार्हतன் என்கிற இந்திரன்; वैरूपன் என்கிற இந்திரன்; वैराजன் என்கிற இந்திரன்; शाक्वरன் என்கிற இந்திரன்; रैवतன் என்கிற இந்திரன் - திரவியம் பனிரெண்டு கபால புரோடாசம். रथन्तरம், बृहत्, वैरूपம், वैराजம், शाक्वरம், रैवतம் என்று ஆறு ஸாமங்களின் பெயர்கள். அவைகளை ப்ருஷ்ட ஸாமங்கள் என்றும் சொல்லுகிறது. இந்திரன் அவைகளை அறிகிறான். ஆகையால் அவனை राथन्तன், बार्हतன் முதலான பெயர்களால் சொல்லி யாகத்தைச் செய்யவேண்டியது. அவைகளுக்கு அபிமாநி தேவதைகள் - அக்கினி, இந்திரன், ஸவிதா, धाता, மருத்துக்கள், बृहस्पति. இந்த राथन्तरம் முதலான சொற்களைச் சேர்த்து, இந்திரனுக்கு யாகம் செய்தால், அந்த தேவதைகள் எல்லாருடைய தேஜஸு யஜமாநனுக்கு வருமாம். நிர்வாபம் ஆறு தேவதைகளுக்கும் தனித்தனியாய் செய்யவேண்டியது. ஆனால் புரோடாசம் ஒன்றுதான். அவதானம் பண்ணி யாகங்களைச் செய்யும் போது, புரோடாசத்திலிருந்து கிழக்கே ஆரம்பித்து, வரிசையாய் பிரதக்ஷிணமாய் எடுத்துக்கொண்டு, வடக்கே முடிக்க வேண்டியது. (கா-2, பி-3, அநு-7, ப-30முதல். இதில் ஸ்விஷ்டகிருத் யாகத்துக்கு எப்படி அவதாநம் பண்ணுவது என்று சந்தேகம். ஒரே தடவை செய்கிறதென்று தீர்மானம். (அத்தி-3, பா-5, அதி-4).

तै.संहिता - काण्डः-2, प्रश्नः-3, अनु-7, पञ्चा.30 & 31

वी॒र्य॑काम॒स्स्यात्तमे॒तया॒ सर्व॑पृष्ठया याजयेदे॒ता ए॒व दे॒वता॒स्स्वेन॑ भाग॒धेये॒नोप॑ धावति॒ ता ए॒वास्मि॑न्निन्द्रि॒यँव्वी॒र्य॑न्दधति॒ यदिन्द्रा॑य॒ राथ॑न्तराय नि॒र्वप॑ति॒ यदे॒वाग्नेस्तेज॒स्तदे॒वाव॑ रुन्द्धे॒ यदिन्द्रा॑य॒ बार्‌ह॑ताय॒ यदे॒वेन्द्र॑स्य॒ तेज॒स्तदे॒वाव॑ रुन्द्धे॒ यदिन्द्रा॑य वैरू॒पाय॒ यदे॒व स॑वि॒तुस्तेज॒स्तत् [30]

ए॒वाव॑ रुन्द्धे॒ यदिन्द्रा॑य वैरा॒जाय॒ यदे॒व धा॒तुस्तेज॒स्तदे॒वाव॑ रुन्द्धे॒ यदिन्द्रा॑य शाक्व॒राय॒ यदे॒व म॒रुता॒न्तेज॒स्तदे॒वाव॑ रुन्द्धे॒ यदिन्द्रा॑य रैव॒ताय॒ यदे॒व बृह॒स्पते॒स्तेज॒स्तदे॒वाव॑ रुन्द्ध ए॒ताव॑न्ति॒ वै तेजा॑सि॒ तान्ये॒वाव॑ रुन्द्ध उत्ता॒नेषु॑ क॒पाले॒ष्वधि॑ श्रय॒त्यया॑तयामत्वाय॒ द्वाद॑शकपाल पुरो॒डाशः॑ [31]

तै.संहिता - काण्डः-2, प्रश्नः-2, अनु-7, पञ्चा.38

(மீமாம்ஸா(அத்தி-3, பா-5, அதி-4) - सर्वपृष्ठेष्टौ स्विष्टकृदिडादीनां सकृदनुष्ठानाधिकरणम्

3.5.4.16 - द्रव्यैकत्वे कर्मभेदात्प्रतिकर्म क्रियेरन् ॥
3.5.4.17 - अविभागाच्च शेषस्य सर्वान्प्रत्यविशिष्टत्वात् ॥

Go to Main Page