195. மேலே ஐந்து அநுபந்தங்களைச் சேர்ந்திருக்கிறது. அவைகளின் விஷயங்களாவன-
1. விகிருதியான இஷ்டிகள்
2. விகிருதியான ஸோமயாகங்கள்
3. ஆதாநம்
4. மஹாசயநம்
5. நாலு காடக சயநங்கள்.
கடைசியில் இதில் வந்திருக்கும் சொற்களுக்கு அகராதி. அவைகளுக்கு நேராக இருக்கும் லக்கங்கள் ஶ்ரௌதத்தின் பாராக்களைக் காட்டுகின்றன.
1-வது அநுபந்தம். - விகிருதியான இஷ்டிகள்.
1. अध्वरकल्पा - இதில் யாகங்கள் - (1) अग्नाविष्णू - எட்டு கபால-புரோடாசம்; ஸரஸ்வதீ - நெய்; ப்ருஹஸ்பதி - சரு. இவைகளுக்கு காலம் ஸோமயாகத்தில் காலைவேளை ஸவநம் செய்யும் போது. (2) अग्नाविष्णू - பதினொரு கபால- புரோடாசம்; सरस्वती - நெய்; बृहस्पति - चरु. இவைகளுக்கு காலம் மத்தியானவேளை ஸவநம் செய்யும் போது. (3) अग्नाविष्णू - பனிரெண்டு கபால புரோடாசம்; सरस्वती - நெய்; बृहस्पति - चरु. இவைகளுக்கு மூன்றாவது ஸவநம் செய்யும்போது. (4) मित्रावरुणौ - ஒற்றைக்கபால புரோடாசம். இதற்குக் காலம் अनूबन्ध्या யாகத்தைச் செய்யும்போது, (तैत्ति.संहिता-2, प्रश्नः-2,अनु-9, प-49, 50, 51, 52). இந்த இஷ்டியில் प्रयाजம் முதலான அங்கங்களை ஒவ்வொரு கூறுக்கும் தனித்தனியாகச் செய்கிறதா - அல்லது நாலு கூறுகளுக்கும் சேர்த்துச் செய்கிறதா என்று சந்தேஹம். தனித்தனியாகச் செய்கிறதென்று தீர்மானம். (मीमांसा.अध्या-11,पा-2, अध्या-4)
2. अन्वारम्भणेष्टि - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளை ஆரம்பிக்கிறவன் முதலில் மூன்று யாகங்களைச் செய்யவேண்டியது. அவைகளாவன अग्नाविष्णू - பதினொரு கபால புரோடாசம்; सरस्वती - चरु; सरस्वान् - பனிரெண்டு கபால- புரோடாசம். இவைகளன்னியில் ஸூத்திரகாரர் இன்னமொரு யாகத்தைச் சேர்த்திருக்கிறார். அதாவது भगी பகீ என்கிற அக்கினி - எட்டுக்கபால புரோடாசம். இவைகளைச் செய்வதற்குப் பிரயோஜநம் - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளை ஆரம்பிக்கும்போது, பூர்ணமாஸ இஷ்டியை முன்னாலே செய்யவேணும். ஏனென்றால் - அதின் மந்திரங்களை வேதத்தில் முன்னாலே படித்திருக்கிறது. (तैत्ति.ब्रा-அஷ்-3, प्रश्नः-5). ஆனால் பௌர்ணமீ முதல் சந்திரன் கலை குறைந்து கொண்டு வருகிறது. அத்துடன் யஜமானனும் க்ஷீணித்துப் போய்விடுவன். ஸரஸ்வதீ அமாவாசியை. அவள் யாகத்தைச் செய்து ஆரம்பித்தால், அமாவாசியைக்குப் பிறகு சந்திரன் வளர்வதுபோல், யஜமாநனும் வளர்கிறான். (तैत्ति.संहिता-3, प्रश्नः-5, अनु-1, प-3,4). இதில் சந்தேகம் - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளின் முதல் பிரயோகத்தில் இவைகளைச் செய்கிறதா; அல்லது ஒவ்வொரு பிரயோகத்திலுமா என்று. முதல் பிரயோகத்தில் தான் என்று தீர்மானம். (मीमांसा,अध्या-9पा-1, अध्या-11)
3. अभ्युदयेष्टि - தர்ஶஇஷ்டிக்காக ஒருவன் चतुर्दशीயை அமாவாசியை என்று தப்பாக நினைத்து நிர்வாபம் செய்கிறான். பிறகு சந்திரன் உதயமாகிறது. அப்போது அரிசியை மூன்று பாகமாகப் பிரிக்கிறது. முழு அரிசி, பெரும் நொய், பொடி நொய் ஆக. பெரும் நொய்யை எட்டு கபால-புரோடாசமாகச் செய்கிறது. அதற்கு தேவதை दाता என்கிற அக்கினி. முழு அரிசியை தயிரில் चरुவாகச் செய்கிறது. அதற்கு தேவதை प्रदाता என்கிற இந்திரன். பொடி நொய்யைப் பாலில் சருவாகச் செய்கிறது. அதற்கு தேவதை शिपिविष्टன் என்கிற विष्णु. (तैत्ति.संहिता-2, प्रश्नः-5, अनु-5, प-27,28). இந்த இஷ்டி தர்ஶ இஷ்டிதானா - அல்லது அகாலத்தில் அதைச் செய்ய ஆரம்பித்தது என்று பிராயச்சித்தமா என்று விசாரித்து, அது தர்ஶ இஷ்டி தான் என்றும், பிரகிருதி இஷ்டியின் தேவதைகளைத் தள்ளி, வேறு தேவதைகளைச் சேர்த்துக் கொண்டதென்றும் தீர்மானம். (मीमांसा,अध्य-6,पा-5, अध्या-1). தர்ஶ இஷ்டியில் நிர்வாபம் பிரதமையில் அன்றோ செய்கிறது. அமாவாசையில் அதைச் செய்யும்படி எப்படி நேர்ந்தது என்றால் இப்படி பதில் சொல்லுகிறார்கள் - முதல் நாள் ராத்திரியே நிர்வாபம் செய்யலாம். அதாவது அமாவாசியை ராத்திரியில். சதுர்தசியை அமாவாசியை என்று நினைத்து இப்படிச் செய்யலாம் - என்று.
4. अवेष्टि - இந்த யாகங்கள் - அக்கினி-எட்டு கபால-புரோடாசம்; இந்திரன்-பதினொரு கபால-புரோடாசம்; विश्वेदेवர்கள் - चरु; मित्रावरुणौ - ஆமீக்ஷா; बृहस्पति - चरु; (तैत्ति.संहिता-1,प्रश्नः-8, अनु-19, प-35). இந்த இஷ்டியை ராஜஸூயத்தைச் சொல்லுகிற இடத்தில் சொல்லி இருந்த போதிலும், வேறுவசநத்தைக் கொண்டு இவைகளை ब्राह्मणன்களும், वैश्यன்களும் செய்யலாம் என்றும், அவைகள் வேறு கர்மம் என்றும் தீர்மானம். (मीमांसा,अध्या-2,पा-3, अध्या-2),(मीमांसा.अध्या-3,पा-4,अधि-15);
5. अश्वप्रतिग्रहेष्टि - இதற்கு தேவதை வருணன். திரவியம் நாலுகபால-புரோடாசம். प्रजापति வருணனுக்கு ஒரு குதிரையைக் கொடுத்தார். அவருக்கு மஹோதரம் என்கிற வியாதி வந்தது. அவர் இந்த இஷ்டியை இதற்கு மருந்து என்று அறிந்து, அதைச் செய்தார். வியாதி போய்விட்டது. இந்தக் கதையைச் சொல்லி எவன் குதிரையை வாங்கிக் கொள்ளுகிறானோ (प्रतिगृह्णाति) அவனை வருணன் பிடித்துக் கொள்ளுகிறான் என்று காட்டி, குதிரை எத்தனையோ, அத்தனை யாகங்களைச் செய்யவேண்டியது என்று வேதம் விதிக்கிறது.(तैत्ति.संहिता-2, प्रश्नः-3, अनु-12, प-46).
இந்த இஷ்டியை எவன் செய்ய வேண்டியது - குதிரையைக் கொடுக்கிறவனா - வாங்கிக் கொள்ளுகிறவனா என்று சந்தேகம். प्रतिगृह्णाति - என்கிற சொல்லுக்கு வாங்கிக்கொள்ளுகிறானென்று பொருள். ஆனால் கொடுத்த प्रजापतिக்கு தொந்தரவு வந்ததாக கதை சொல்லுகிறது. ஆகையால் இந்தச் சொல்லுக்கு வாங்கும்படி செய்கிறது - அதாவது கொடுப்பது என்று பொருள் கொண்டு, குதிரையைக் கொடுக்கிறவன் தான் இஷ்டியைச் செய்ய வேணுமென்று தீர்மானம்
(मीमांसा,अध्या-3,पा-4, अध्या-15).;
मैत्रा.संहिता.का-2,प्रपा-3(काम्येष्टयः) - Vedartha-Sadas - अश्वप्रतिग्रहेष्टिः
अश्वप्रतिग्रहेष्टिः-Pdf
6. आग्रयणம் - இது மூன்று யாகங்களுக்கும் பெயர். அவைகளாவன - இந்திராக்கினீ - 12 கபால புரோடாசம்; விச்வே தேவர்கள் - சரு; ஸோமன் - சியாமாகம் என்பதால் செய்யப்பட்ட சரு. தக்ஷிணை முதல் இரண்டு யாகங்களுக்கு முதல் பிறந்த கன்றுக்குட்டி; மூன்றாவதற்கு வஸ்திரம். (तैत्ति.संहिता-1, प्रश्नः-8, अनु-1, प-2). பிரகிருதியின் தக்ஷிணையான அந்வாஹார்யத்தின் தர்மங்களில் எவைகள் பாதிக்கப்படுகின்றன என்று விசாரிக்கப்படுகிறது. (मीमांसा,अध्या-110,पा-3, अध्या-6,7,8,9,10).
7. चित्रेष्टि - இதற்கு தேவதைகள் - அக்கினி, ஸோமன், त्वष्टा, सरस्वती, ஸரஸ்வான், सिनिवीली (चरु), இந்திரன்.(तैत्ति.संहिता-2, प्रश्नः-4, अनु-6).இங்கே நாலாவது ஐந்தாவது தேவதைகளைச் சேர்த்து, ஸாரஸ்வதௌ என்று சொல்லியிருக்கிறது. அவர்களில் எந்த தேவதையின் யாகத்தையும், அதைச்சேர்ந்த வியாபாரங்களையும் முதலில் செய்கிறதென்று சந்தேகம். மந்திரகாண்டத்தில் ஸ்திரீயாகத்தின் மந்திரங்களை முன்னாலே படித்திருப்பதால், அதை முன்னாலே செய்யவேண்டியது என்றும்,அதைச்சேர்ந்த வியாபாரங்களையும் அப்படியே முன்னே செய்யவேண்டியது என்றும் தீர்மானம். (मीमांसा,अध्या-5,पा-1, अध्या-7).
8. जातेष्टि - தேவதை वैश्वाநரன். திரவியம் பனிரெண்டு கபால புரோடாசம். அதைப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் செய்யவேண்டியது. இதை விதித்து - எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று கபாலங்களில் செய்த புரோடாசங்களை ஸ்தோத்திரம் பண்ணி, கடைசியில் இந்த இஷ்டியைச் செய்வதால், பிறந்த குழந்தை சுத்தனாயும், தேஜஸு, சாப்பாடு, இந்திரிய வலிமை, பசு ஸம்பத்து - இவைகள் உள்ளவனாயுமாவன் என்று வேதம் முடிக்கிறது. (तैत्ति.संहिता-2, प्रश्नः-2, अनु-5, प-25,26) இது ஒரே இஷ்டியென்றும், இதின் பலன் பிறந்த குழந்தைக்கு என்றும், அதை ஜாதகர்மத்துக்கு பிறகும், தீட்டுப்போன பிறகும் செய்யவேண்டியதென்றும் தீர்மானம். (मीमांसा,अध्या-1,पा-4, अध्या-12; अध्या-4,पा-3, अध्या-17,18,19).
9. ज्योतिष्मतेष्टि - ज्योतिष्मान् என்கிற அக்கினி - திரவியம் எட்டுக் கபால-புரோடாசம். அக்கினிஹோத்திரம் செய்வதற்காக அக்கினியை எடுத்தபிறகு, ஹோமம் செய்வதற்கு முன்னால் , அது அணைந்துபோனால், இந்த இஷ்டியைச் செய்ய வேண்டியது. (तैत्ति.संहिता-2, प्रश्नः-2, अनु-4, प-21, 22). தர்ச-பூர்ணமாஸ இஷ்டிகளுக்காக எடுக்கப்பட்ட அக்கினி அணைந்துபோனால், இந்த பிராயச்சித்தம் இல்லையென்று தீர்மானம். (मीमांसा,अध्या-9,पा-4, अध्या-7).
10. दाक्षायणयज्ञம் - தர்ஶ இஷ்டியை இரண்டு தடவையும், பூர்ணமாஸ இஷ்டியை இரண்டு தடவையும் செய்வது. எப்படியென்றால் -
அமாவாசையில் பிரதமையில் தர்ஶம் அக்கினி-8 கபாலபுரோடாசம் அக்கினி-8 கபாலபுரோடாசம் இந்திராக்கினி-11 கபால புரோடாசம் மித்திராவருணன் ஆமிக்ஷா பௌர்ணமியில் பிரதமையில் பூர்ணமாஸம் அக்கினி-8 கபால புரோடாசம் அக்கினி-8 கபாலபுரோடாசம் அக்கினீஷோமன் 11- கபால புரோடாசம். இந்திரன்-தயிர் இந்த யக்ஞத்தில் உபாம்சு யாஜமும், இந்திர தேவதையின் பால் யாகமுமில்லை.(तैत्ति.संहिता-2, प्रश्नः-5, अनु-5, प-30,31,32). இவைகள் தர்ஶ-பூர்ணமாச இஷ்டிகள்தான்; வேறு கர்மங்கள் அன்று என்று தீர்மானம் (मीमांसा,अध्या-2,पा-3, अध्या-4).
11. निशियज्ञः - இதற்கு தேவதை रक्षोहन् என்கிற அக்கினி - திரவியம் எட்டுக் கபால புரோடாசம். எவனுக்கு ராக்ஷஸர்களால் தொந்தரவு வருகிறதோ, அவன் இதை அமாவாசையில் நடு ராத்திரியில் செய்யவேண்டியது. (तैत्ति.संहिता-2, प्रश्नः-2, अनु-2, प-7,8).இது தர்ஶ இஷ்டியின் நடுவில் வருவதால், தனியாக அங்கயாகங்களைச் செய்ய வேண்டியதில்லை என்று தீர்மானம் (मीमांसा,अध्या-12,पा-2, अध्या-5).
12. वैमृथेष्टि - இதற்கு தேவதை वैमृधன் என்கிற இந்திரன் - திரவியம் பதினொரு கபால-புரோடாசம். இதைப் பூர்ணமாச இஷ்டி முடிந்த பிறகு செய்யவேண்டியது. (तैत्ति.संहिता-2, प्रश्नः-2, अनु-7, प-38). அல்லது அத்துடன் சேர்த்தும் समानतन्त्रமாகச் செய்யலாம்.
13. सर्वपृष्ठेष्टि - இதற்கு தேவதைகள் - राथन्तरன் என்கிற இந்திரன்; बार्हतன் என்கிற இந்திரன்; वैरूपன் என்கிற இந்திரன்; वैराजன் என்கிற இந்திரன்; शाक्वरன் என்கிற இந்திரன்; रैवतன் என்கிற இந்திரன் - திரவியம் பனிரெண்டு கபால புரோடாசம். रथन्तरம், बृहत्, वैरूपம், वैराजம், शाक्वरம், रैवतம் என்று ஆறு ஸாமங்களின் பெயர்கள். அவைகளை ப்ருஷ்ட ஸாமங்கள் என்றும் சொல்லுகிறது. இந்திரன் அவைகளை அறிகிறான். ஆகையால் அவனை राथन्तன், बार्हतன் முதலான பெயர்களால் சொல்லி யாகத்தைச் செய்யவேண்டியது. அவைகளுக்கு அபிமாநி தேவதைகள் - அக்கினி, இந்திரன், ஸவிதா, धाता, மருத்துக்கள், बृहस्पति. இந்த राथन्तरம் முதலான சொற்களைச் சேர்த்து, இந்திரனுக்கு யாகம் செய்தால், அந்த தேவதைகள் எல்லாருடைய தேஜஸு யஜமாநனுக்கு வருமாம். நிர்வாபம் ஆறு தேவதைகளுக்கும் தனித்தனியாய் செய்யவேண்டியது. ஆனால் புரோடாசம் ஒன்றுதான். அவதானம் பண்ணி யாகங்களைச் செய்யும் போது, புரோடாசத்திலிருந்து கிழக்கே ஆரம்பித்து, வரிசையாய் பிரதக்ஷிணமாய் எடுத்துக்கொண்டு, வடக்கே முடிக்க வேண்டியது. (तैत्ति.संहिता-2, பி-3, अनु-7, प-29முதல் இதில் ஸ்விஷ்டகிருத் யாகத்துக்கு எப்படி அவதாநம் பண்ணுவது என்று சந்தேகம். ஒரே தடவை செய்கிறதென்று தீர்மானம். (मीमांसा,अध्या-3,पा-5, अध्या-4).
14. साकम्प्रस्थायीयம் - தர்ஶயாகத்தில் அக்கினிதேவதையின் புரோடாசயாகம் ஆனபிறகு, மற்ற இரண்டு யாகங்களுக்கு பதிலாக இரண்டு பால் குடங்களையும் இரண்டு தயிர் குடங்களையும் ஹோமம் செய்கிறது. தேவதை இந்திரன்தான். இது தர்ஶ இஷ்டி தான்; வேறு கர்மம் அன்று. (तैत्ति.संहिता-2, प्रश्नः-5, अनु-4, प-21 अध्या-2,पा-3. अध्या-4).
15. साङ्ग्रहणेष्टि - இதற்கு தேவதை विश्वेदेवர்கள். திரவியம் புரோடாசம். இதில் பிரகிருதியில் சொல்லியிருக்கும் மூன்று பரிதி மந்திரங்களுக்குப் பதிலாக மூன்று மந்திரங்களும், உபஹோமங்களுக்கு மூன்று மந்திரங்களும் விதிக்கப்படுகின்றன. (तैत्ति.संहिता-2, प्रश्नः-3, अनु-9). உபஹோமங்கள் என்றால் பிரதாநஹோமங்களுக்கு அடுத்த மேலே செய்யப்படும் ஹோமங்கள். பிரகிருதியான தர்ஶ பூர்ணமாஸ இஷ்டிகளில் பார்வண ஹோமமும், நாரிஷ்ட ஹோமங்களும் உபஹோமங்களாகச் செய்யப்படுகின்றன. பார்வணஹோமம் பிரகிருதியாகத்தில்தான் உண்டு. விகிருதி இஷ்டிகளில் இல்லை. இதில் விதிக்கப்பட்ட ஆமநஹோமங்கள் அநுயாஜஹோமங்களுக்கு பதிலாகவா, அல்லது அவைகளையும்கூட செய்ய வேண்டியதா என்று சந்தேகம். கூடச்செய்ய வேண்டுமென்று தீர்மானம் (मीमांसा,अध्या-10,पा-4, अध्या-5). மேலும், இந்த ஆமநஹோமங்கள் பிரதாநஹோமங்களா, அல்லது ஸாங்கிரஹணேஷ்டிக்கு அங்கமா என்று சந்தேகம். அங்கமென்று தீர்மானம் (मीमांसा,अध्या-4,पा-4, अध्या-4).
16. सुमनस् - தர்ஶ இஷ்டியை இரண்டு தடவையும், பூர்ணமாஸ இஷ்டியை இரண்டு தடவையும் செய்வது. அப்போது முதல் தடவை பர்வதிநத்திலும், இரண்டாம் தடவை பிரதமையிலும் செய்யவேண்டியது. (तैत्ति.संहिता-2, प्रश्नः-5, अनु-5, प-29,30).
Go Top
Go Back