3. अभ्युदयेष्टि - தர்ஶஇஷ்டிக்காக ஒருவன் चतुर्दशीயை அமாவாசியை என்று தப்பாக நினைத்து நிர்வாபம் செய்கிறான். பிறகு சந்திரன் உதயமாகிறது. அப்போது அரிசியை மூன்று பாகமாகப் பிரிக்கிறது. முழு அரிசி, பெரும் நொய், பொடி நொய் ஆக. பெரும் நொய்யை எட்டு கபால-புரோடாசமாகச் செய்கிறது. அதற்கு தேவதை दाता என்கிற அக்கினி. முழு அரிசியை தயிரில் चरुவாகச் செய்கிறது. அதற்கு தேவதை प्रदाता என்கிற இந்திரன். பொடி நொய்யைப் பாலில் சருவாகச் செய்கிறது. அதற்கு தேவதை शिपिविष्टன் என்கிற विष्णु. (तैत्ति.संहिता.का-2, प्रश्नः-5, अनु-5, प-27,28). இந்த இஷ்டி தர்ஶ இஷ்டிதானா - அல்லது அகாலத்தில் அதைச் செய்ய ஆரம்பித்தது என்று பிராயச்சித்தமா என்று விசாரித்து, அது தர்ஶ இஷ்டி தான் என்றும், பிரகிருதி இஷ்டியின் தேவதைகளைத் தள்ளி, வேறு தேவதைகளைச் சேர்த்துக் கொண்டதென்றும் தீர்மானம். (अध्या-6, पा-5, अधि-1). தர்ஶ இஷ்டியில் நிர்வாபம் பிரதமையில் அன்றோ செய்கிறது. அமாவாசையில் அதைச் செய்யும்படி எப்படி நேர்ந்தது என்றால் இப்படி பதில் சொல்லுகிறார்கள் - முதல் நாள் ராத்திரியே நிர்வாபம் செய்யலாம். அதாவது அமாவாசியை ராத்திரியில். சதுர்தசியை அமாவாசியை என்று நினைத்து இப்படிச் செய்யலாம் - என்று.
तैत्ति.संहिता.का-2, प्रश्नः-5, अनु-5, प-27,28
नासो॑मयाजी॒ सन्न॑ये॒दना॑गतँ॒व्वा ए॒तस्य॒ पयो॒ योऽसो॑मयाजी॒ यदसो॑मयाजी स॒न्नयेत्परिमो॒ष ए॒व सोऽनृ॑तङ्करो॒त्यथो॒ परै॒व सि॑च्यते सोमया॒ज्ये॑व सन्न॑ये॒त्पयो॒ वै सोम॒ पय॑स्सान्ना॒य्यम्पय॑सै॒व पय॑ आ॒त्मन्ध॑त्ते॒ वि वा ए॒तम्प्र॒जया॑ प॒शुभि॑रर्धयति व॒र्धय॑त्यस्य॒ भ्रातृ॑व्यँ॒य्यस्य॑ ह॒विर्निरु॑प्तम्पु॒रस्ताच्च॒न्द्रमाः [27]
अ॒भ्यु॑देति॑ त्रे॒धा त॑ण्डु॒लान्वि भ॑जे॒द्ये म॑ध्य॒मास्स्युस्तान॒ग्नये॑ दा॒त्रे पु॑रो॒डाश॑म॒ष्टाक॑पालङ्कुर्या॒द्ये स्थवि॑ष्ठा॒स्तानिन्द्रा॑य प्रदा॒त्रे द॒धश्च॒रुय्येँऽणि॑ष्ठा॒स्तान्विष्ण॑वे शिपिवि॒ष्टाय॑ शृ॒ते च॒रुम॒ग्निरे॒वास्मै प्र॒जाम्प्र॑ज॒नय॑ति वृ॒द्धामिन्द्र॒ प्र य॑च्छति य॒ज्ञो वै विष्णु॑ प॒शव॒श्शिपि॑र्य॒ज्ञ ए॒व प॒शुषु॒ प्रति॑ तिष्ठति॒ न द्वे [28]
अध्या-6, पा-5, अधि-1
अभ्युदये कालापराधादिज्याचोदना स्याद्यथा पञ्चशरावे ॥