2. अन्वारम्भणेष्टि - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளை ஆரம்பிக்கிறவன் முதலில் மூன்று யாகங்களைச் செய்யவேண்டியது. அவைகளாவன अग्नाविष्णू - பதினொரு கபால புரோடாசம்; सरस्वती - चरु; सरस्वान् - பனிரெண்டு கபால- புரோடாசம். இவைகளன்னியில் ஸூத்திரகாரர் இன்னமொரு யாகத்தைச் சேர்த்திருக்கிறார். அதாவது भगी பகீ என்கிற அக்கினி - எட்டுக்கபால புரோடாசம். இவைகளைச் செய்வதற்குப் பிரயோஜநம் - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளை ஆரம்பிக்கும்போது, பூர்ணமாஸ இஷ்டியை முன்னாலே செய்யவேணும். ஏனென்றால் - அதின் மந்திரங்களை வேதத்தில் முன்னாலே படித்திருக்கிறது. (அஷ்-3, प्रश्नः-5). ஆனால் பௌர்ணமீ முதல் சந்திரன் கலை குறைந்து கொண்டு வருகிறது. அத்துடன் யஜமானனும் க்ஷீணித்துப் போய்விடுவன். ஸரஸ்வதீ அமாவாசியை. அவள் யாகத்தைச் செய்து ஆரம்பித்தால், அமாவாசியைக்குப் பிறகு சந்திரன் வளர்வதுபோல், யஜமாநனும் வளர்கிறான். (तैत्ति.संहिता.का-3, प्रश्नः-5, अनु-1, प-3,4). இதில் சந்தேகம் - தர்ஶ-பூர்ணமாஸ இஷ்டிகளின் முதல் பிரயோகத்தில் இவைகளைச் செய்கிறதா; அல்லது ஒவ்வொரு பிரயோகத்திலுமா என்று. முதல் பிரயோகத்தில் தான் என்று தீர்மானம். (मीमांसा.अध्या-9 पा-1;अधि-11).

(तैत्ति.संहिता.का-3, प्रश्नः-5, अनु-1, प-3,4).)
पूर्व॒ आल॑भन्त दर्‌शपूर्णमा॒सावा॒लभ॑मान ए॒तौ होमौ॑ पु॒रस्ताज्जुहुयाथ्सा॒ख्षादे॒व द॑र्‌शपूर्णमा॒सावा ल॑भते ब्रह्मवा॒दिनो॑ वदन्ति॒ स त्वै द॑र्‌शपूर्णमा॒सावा ल॑भेत॒ य ए॑नयोरनुलो॒मञ्च॑ प्रतिलो॒मञ्च॑ वि॒द्यादित्य॑मावा॒स्या॑या ऊ॒र्ध्वन्तद॑नुलो॒मम्पौर्णमा॒स्यै प्र॑ती॒चीन॒न्तत्प्र॑तिलो॒मय्यँत्पौर्णमा॒सीम्पूर्वा॑मा॒लभे॑त प्रतिलो॒ममे॑ना॒वा ल॑भेता॒मुम॑प॒ख्षीय॑माण॒मन्वप॑ [3]

ख्षी॒ये॒त॒ सा॒र॒स्व॒तौ होमौ॑ पु॒रस्ताज्जुहुयादमावा॒स्या॑ वै सर॑स्वत्यनुलो॒ममे॒वैना॒वा ल॑भते॒ऽमुमा॒प्याय॑मान॒मन्वा प्या॑यत आग्नावैष्ण॒वमेका॑दशकपालम्पु॒रस्ता॒न्निर्व॑पे॒थ्सर॑स्वत्यै च॒रु सर॑स्वते॒ द्वाद॑शकपालँ॒य्यदाग्ने॒यो भव॑त्य॒ग्निर्वै य॑ज्ञमु॒खँय्य॑ज्ञमु॒खमे॒वर्द्धि॑म्पु॒रस्ताद्धत्ते॒ यद्वैष्ण॒वो भव॑ति य॒ज्ञो वै विष्णु॑र्य॒ज्ञमे॒वारभ्य॒ प्र त॑नुते॒ सर॑स्वत्यै च॒रुर्भ॑वति॒ सर॑स्वते॒ द्वाद॑शकपालोऽमावा॒स्या॑ वै सर॑स्वती पू॒र्णमा॑स॒स्सर॑स्वा॒न्तावे॒व सा॒ख्षादा र॑भत ऋ॒ध्नोत्याभ्या॒न्द्वाद॑शकपाल॒स्सर॑स्वते भवति मिथुन॒त्वाय॒ प्रजात्यै मिथु॒नौ गावौ॒ दख्षि॑णा॒ समृ॑द्ध्यै ॥ [4]

मीमांसा.अध्या-9 पा-1;अधि-11
9.1.11.36 - अर्थाभिधानसंयोगान्मन्त्रेषु शेषभावः स्यात्तत्राचोदितमप्राप्तं चोदिताभिधानात् ॥

9.1.11.37 - अर्थाभिधानसंयोगान्मन्त्रेषु शेषभावः स्यात्तत्राचोदितमप्राप्तं चोदिताभिधानात् ॥



Go to Main Page