काठकचयनम्
சயநங்களில் நாலு விதங்கள் காடகத்தில் சொல்லப்படுகின்றன.
सावित्रचयनम्
1. அவைகளில் முதலாவது सावित्रम् என்பது.
உத்தரவேதியின் நடுவில் வண்டிச்சக்கரம் அளவுள்ள சக்கரமான ஒரு கோட்டை கிழித்து, அதில் நடுவில் வேரோடு கூடிய பச்சையான ஒரு நாணல் செடியை நட்டு, ஜுஹூவில் நெய்யை ஐந்து ஹோமங்களைச் செய்கிறது. பிறகு உத்தரவேதியில் மேல் மண்ணை எடுத்துவிட்டு, புரோக்ஷித்து, 90-வது பாராவில் உத்தரவேதிக்குச் சொன்னபடி, अभिघारणம் செய்கிறது. அதின் பிறகு கோட்டுக்குள் ஒன்பது சக்கரமான கோடுகளை, ஒன்றுக்குள் ஒன்றாய், கிழித்து, மணலையும், ஊஷரமண்ணையும் போட்டு அவைகளைக் கலந்து, சுக்கான் கல்லுகளை நிறையப்போட்டு, அதின்மேலே மணலைப்போட்டு, கோடுகளில் கல்லுகளை வைக்கவேண்டியது. கல்லுகள் தங்கத்தால் செய்தவைகளாய் இருக்கவேண்டியது. அது முடியாவிட்டால், கைவிரலின் நுனிக்கணுவின் அளவுள்ள சுக்கான் கல்லுகளை (शर्कराः) நெய்யில் தோய்த்து, வைக்கவேண்டியது. (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-11).
2. கல்லுகளின் துகை ஒன்பதாவது - (அதாவது எல்லாக்கோடுகளுக்கும் வெளியில் இருப்பது) கோட்டில் 15 கல்லுகளை கிழக்கே ஆரம்பித்து வரிசையாய் வைக்கிறது. பிறகு இரண்டு இரண்டு கல்லுகளுக்கு நடுவில் ஒரு கல்லாக 15 கல்லுகளை வைக்கிறது. ஆக ஒன்பதாவது கோட்டில் 30 கல்லுகள். இப்படியே எட்டாவது, ஏழாவது, ஆறாவது கோடுகளிலும். அடுத்த கோடுகளில் வரிசையாய் 12, 12, 13, 15, 9 கல்லுகள். நடுவில் 4 கல்லுகள். ஆக மொத்தம் 185 கல்லுகள்.
3. இவைகளில் ஒன்பதாவது கோட்டில் முதலில் வைக்கப்பட்டவைகள் வளர்பிறையின் 15 பகல்களையும், எட்டாவது, ஏழாவது, ஆறாவது கோடுகளில் முதலில் வைக்கப்பட்டவைகள் வரிசையாய் வளர்பிறையின் 15 ராத்திரிகளையும், தேய்பிறையின் 15 பகல்களையும், அதின் 15 ராத்திரிகளையும் காட்டுகின்றன.
ஒவ்வொன்றிலும் பின்னாலே வைக்கப்பட்டவைகள் உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் நடுவிலிருக்கும் முகூர்த்தங்களையும், அஸ்தமநத்துக்கும் உதயத்துக்கும் நடுவிலிருக்கும் முகூர்த்தங்களையும் காட்டுகின்றன. முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை. ஐந்தாவது, நாலாவது, மூன்றாவது கோடுகளில் வைக்கப்பட்டவைகள் வரிசையாய் ஒரு வருஷத்தினுடைய 12 வளர்பிறைகளையும், 12 தேய்பிறைகளை யும், 13 மாசங்களையும் காட்டுகின்றன. மாதமென்பது வளர்பிறையின் பிரதமை முதல் அமாவாசியை வரையில் உள்ள காலம். இவ்விதமாசங்கள் ஒருவருஷத்தில் 13 உண்டு. அவைகளில் ஒன்றை அதிமாஸம் என்று சொல்லுகிறது. இரண்டாவது கோட்டின் கல்லுகள் பகலிலோ, ராத்திரியிலோ உள்ள 15 முகூர்த்தங்களின் முகூர்த்தங்களைக் காட்டுகின்றன. கடைசிக் கோட்டின் கல்லுகள் ஆறு முக்கியமான யாகங்களையும், மூன்று ருதுக்களையும் காட்டுகின்றன. யாகங்களாவன - अग्निष्टोमம், उक्थ्यம், अतिरात्रம், द्विरात्रம், त्रिरात्रம், चतूरात्रம். ருதுக்களாவன – அக்நிருது, சூர்யருது, சந்திரருது. நடுவில் வைக்கப்பட்டவைகள் வருஷங்கள். ஒவ்வொரு கல்லையும் ஒரு மந்திரத்தைச் சொல்லி வைக்கிறது. கீழே சொன்னவைகளைச் சொல்லும் சொற்களைச் சொல்லி, அதின் தேவதை கல்லை வைக்கட்டும் என்றும். அங்கிரஸ் என்னும் ருஷ்களின் யாகங்களில் போல அது அசையாமல் இருக்கட்டுமென்றும் சொல்லப்படுகிறது. (काठकम् - प्रश्नः-1, अनु-1; आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19 कण्डि-12).
4. பிறகு நாலு स्वयमातृण्णा என்கிற பெரிய சுக்கான் கல்லுகளை நாலு திக்குகளிலும் வைத்து, (1-வது அநுபந்தம் பாரா-6 (3) இன் குறிப்பு) மீதி இடங்களை லோகம் பிருணா என்கிற கல்லுகளால் அடைக்கிறது. லோகம்பிருணா என்று எட்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவைகளில் நாலு வாக்கியங்கள் ஒரு மந்திரம்; மற்ற நாலும் ஒரு மந்திரம். முதல் மந்திரத்தைச் சொல்லி ஒரு கல்லையும், இரண்டாவது மந்திரத்தைச் சொல்லி இன்னொரு கல்லையும் வைக்கிறது. இப்படி இடம் அடைகிற வரையில் இவைகளை வைக்கிறது. பிறகு சாத்வாலத்திலிருந்து மண்ணைக் கொண்டுவந்து மேலே போடுகிறது. இது ஒருசிதி. மந்திரங்களைச் சொல்லி ஜபித்து, உபஸ்தாநமும் செய்கிறது. இதின் பிறகு வடபுறத்தில் கோடியில் வைக்கப்பட்ட கல்லின் மேலே வெள்ளாட்டின் பாலை எருக்கிலையால் ஹோமம்செய்து, இலையை மாடுகள் நடமாடாத இடத்தில் எறிந்துவிடுகிறது. இதின் பிறகு ஹோதா கிழக்கு முகமாய் உட்கார்ந்து கொண்டு ஒரு சஸ்திரம் சொல்லுகிறான். (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-12).
5. இப்படி வைக்கப்பட்ட चितिயில் அக்கினியைப் பிரணயநம் செய்து, अतिमुक्ति ஹோமம் (பாரா-90) வரையில் செய்து, ஐந்து தடவை, ஒவ்வொன்றிலும் நெய்யை நாலு தடவை, எடுத்துக்கொண்டு, ஐந்து ஹோமங்களைச் செய்கிறது. அவைகளில் முதல்மூன்று ஹோமங்கள் மஹாசயநத்தில் செய்யப்படும் शतरुद्रीयम्, वसोर्धारै, அந்த ஹோமங்கள் போல. அவைகளைச் செய்யும்போது, ஹோமம் செய்து மிகுந்ததை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டியது. கடைசியில் அதைத்தொட்டு, யஜமாநன் முகத்தைத் துடைத்துக்கொள்ள வேண்டியது. இதின்பிறகு 7-வது அநுவாகத்தில் சொன்ன மந்திரங்களைக் கொண்டு 21 ஹோமங்களைச் செய்ய வேண்டியது. இத்துடன் சயநம் முடிகிறது. (आप.श्रौत.सूत्रम्,प्रश्नः-19,कण्डि-13).
6. இந்த ஸாவித்திர சயநம் பசுயாகத்துக்கு அங்கமாக செய்யப்படுகிறது. அப்போது ஒரு கிரஹபாத்திரத்தில் வஸா என்கிற ஜலத்தை எடுத்துக்கொண்டு, ஹோமம் செய்து, மீதியைப் பக்ஷணம் செய்யவேண்டியது. இதற்கு मृत्युग्रहம் என்று பெயர். மநோதா என்கிற மந்திரத்தைச் சொல்லுவதற்கு மின்னாலே (பாரா-100) வஸையின் கிரஹணம்; ஸ்விஷ்டகிருத் யாகத்துக்கு மேலே ஹோமம்; பசுவின் இடாபக்ஷணம் ஆனபிறகு இதின் பக்ஷணம். வஸை என்பது பசுவின் அங்கங்களை पाकம் செய்த ஜலம். (Ref. Para.5 link)
नाचिकेतचयनम्
(7) नाचिकेतचयनம் - இதை सावित्र चयनத்தைப் போலவே செய்கிறது. ஆனால் கோடுகளைக் கிழிப்பதில்லை; கல்லுகள் 21 தான். உத்தரவேதியின் நடுவிலே அவைகளை வைக்கிறது. சக்கிரமாக வைக்கலாம், அல்லது நாலுபக்கங்கள் உள்ளவைகளாயும் வைக்கலாம்; இவைகளுக்கு 21 மந்திரங்கள் 2-வது பிரச்நத்தில் 1-வது அநுவாகத்தில் படிக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கே ஆரம்பித்து प्रदक्षिणமாய் கல்லுகளை வைத்து வடக்கே முடிக்கிறது. கடைசியில் स्वयमातृण्णाவை வைப்பது முதல் பாக்கி வியாபாரங்களை ஸாவித்திர சயநத்துக்கு கீழே 4,5-வது பாராக்களில் சொன்னபடி செய்து, முடிக்கிறது.
(8) இந்த சயநத்தை பசுயாகம், ஸோமயாகம், ஸத்திரயாகம். எல்லா சொத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்கும் யாகம் - இவைகளில் செய்யலாம். எங்கே அநேக ஆஹுதிகள் இருக்கின்றனவோ, அங்கேயும். யஜமாநன் கோறும் பலனுக்குத் தகுந்தபடி கல்லுகளை வைக்கலாம். எப்படியென்றால் -
(1) பசுவை ஆசைப்பட்டால், ஒவ்வொரு திக்கிலும் ஐந்து கல்லுகள்; நடுவில் ஒன்று.
(2) எல்லாருக்கும் மேலாக இருப்பதை, நல்லபெயரை, பிள்ளைகுட்டிகளை ஆசைப்பட்டால், கிழக்கேயும், மேற்கேயும் ஏழு, ஏழு கல்லுகள்; தெற்கேயும், வடக்கேயும் மூன்று, மூன்று; நடுவில் ஒன்று.
(3) எல்லோருக்கும் மேலாக இருப்பதை ஆசைப்பட்டால், நடுவில் ஆரம்பித்து, கிழக்கே வைத்துக் கொண்டு போகவேண்டியது.
(4) சுவர்க்கத்தை ஆசைப்பட்டால், மேற்கே ஆரம்பித்து, கிழக்கே வைத்துக் கொண்டு போகவேண்டியது. (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-14).
चातुर्होत्रचयनम्
(9). மூன்றாவது चयनம் चातुर्होत्रம் என்பது. அதில் கல்லுகளை வைக்கும் விதம் - நாணல் செடிக்குக் கிழக்கே 15 கல்லுகளை தெற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, வடக்கே முடிக்கிறது. தென் புறத்தில் 9 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. மேல் புறத்தில் 10 கல்லுகளை தெற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, வடக்கே முடிக்கிறது. வடபுறத்தில் 11 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. நடுவில் 12 கல்லுகளை மேற்கே ஆரம்பித்து, வரிசையாய் வைத்து, கிழக்கே முடிக்கிறது. ஆக 57 கல்லுகள். இவைகளில் ஒவ்வொரு வரிசையிலும் கடைசி ஐந்து கல்லுகளை ஹிருதயம் என்கிற மந்திரத்தால் ஒன்றையும், யஜுஸ் என்கிற மந்திரத்தால் இரண்டையும் வைக்கிறது. மற்றவைகளுக்கு வரிசையாய் दशहोता, चतुर्होता, पञ्चहोता, षड्ढोता, सप्तहोता என்கிற மந்திரங்கள். ग्रहम्, प्रतिग्रहम्, लोकम्पृणा என்கிற மந்திரங்களால் வேறுகல்லுகளை இடம் இருக்கும் வரையில் வைக்கிறது. மற்ற வியாபாரங்கள் सावित्रचयनத்தில் போலவே (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19,कण्डि-14).
वैश्वसृजचयनम्
10. நாலாவது वैश्वसृजம் - இதைச் செய்யும் விதம் - सावित्र चयनத்தில் போலவே, கோடுகளைக் கிழிக்கிறது, மூன்று கோடுகள் ஒன்றுக்குள் ஒன்றாக. வெளிக்கோட்டில் 18 கல்லுகள்; நடுக்கோட்டில் 15; உள்ளுக்கோட்டில் 9. இவைகளுக்கு மந்திரங்கள் 3-வது பிரச்நம், 6,7,8-வது அநுவாகங்களில் படிக்கப்பட்டு இருக்கின்றன. त्रयोदशरात्रம் முதல் शतरात्रம் வரையிலுள்ள महाव्रतத்துடன் கூடிய सत्रங்களிலும், மூன்று सारस्वतसत्रங்களிலும், काठकचातुर्मास्यங்களிலும், षडहமில்லாத साध्यानामयन ங்களிலும், विश्वसृजामयनத்திலும், இரண்டு प्रजापतेः सहस्रसम्वत्सरங்களிலும், இந்த चयनம் செய்யப் படுகிறது. (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-15).
(11). இந்த நான்கு चयनங்களைத் தனித்தனியாகவும் செய்யலாம்; சேர்த்தும் செய்யலாம். அப்போது அவைகளுக்கு समष्टिचयनம் என்று பெயர். अग्निष्टोमம் தவிர மற்ற ஸோமயாகங்களில் இதைச்செய்தால், சில இஷ்டிகளை அதற்கு அங்கமாகச் செய்ய வேண்டியது.
दिवःश्येनी इष्टयः
அவைகளில் முதல் सङ्घம் (கூறு) दिवःश्येनी என்று சொல்லப்படுகிறது. இதில் ஏழு இஷ்டிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மூன்று யாகங்கள். முதலாவது இஷ்டி (1) காமனாகிய அக்கினிக்கு 8-கபால புரோடாசம்; (2) आशा - चरु; (3) अनुमति - चरु. பாக்கி ஆறு இஷ்டிகளிலும் இப்படியே. இரண்டாவது யாகத்தின் தேவதைகள் மாத்திரம் வேறு. அவர்களாவன - வரிசையாய் कामம், ब्रह्म, यज्ञம், आपः, बलिमान् என்கிற அக்கினி, अनुवित्ति. இவர்களும் முதல் இஷ்டி இரண்டாவது தேவதையும். स्वर्गलोकத்துக்கு द्वारங்களாம். (काठकम्, प्रश्नः-3, अनु-2).
अपाघा इष्टयः
(12). இரண்டாவது सङ्घத்தில் ஐந்து இஷ்டிகள்; ஒவ்வொன்றிலும் மூன்று யாகங்கள். முதல் யாகமும், மூன்றாவது யாகமும் இரண்டாவது யாகத்துக்குத் திரவியமும் ஒவ்வொரு இஷ்டியிலும் முதல் ஸங்கத்தில் போலவே. இரண்டாவது யாகத்துக்கு தேவதைகள் மாத்திரம் வேறு. அவர்களாவன - तपस्, श्रद्धा, सत्यம், मनस्, चरणம். இவர்களும் स्वर्गलोकத்துக்கு द्वारங்கள். (काठकम्, प्रश्नः-3, अनु-4).
Go Top