2-வது அநுபந்தம் - விகிருதியான ஸோமயாகங்கள்

1. एकाहसोमयागங்கள்


1. अग्निष्टुत् - இதில் எல்லா ஸ்தோத்திரங்களுக்கும் தேவதை அக்கினி. இதில் ஐந்து விதங்கள் உண்டு. அவைகளில் ஒன்றில் எல்லா ஸ்தோத்திரங்களுக்கும் स्तोमம் त्रिवृत् (9); இது अग्निष्टोमसामத்துடன் முடிகிறது. அது वायु தேவதையின் ऋக்கில் गानம் செய்யப் பட்ட वारवन्तीयம். பசு வேண்டுமென்கிறவனுக்கு वारवन्तीय ஸாமத்தை रे என்கிற எழுத்தை உடைய ऋக்கில் गानம் செய்ய வேண்டியது. (ताण्ड्य.ब्रा.अध्या-17, खण्डः-6,7). சொன்ன ஸாமத்தைக் கொண்டு இந்த யாகத்தைச் செய்யவேண்டுமென்றும், அது பசு என்கிற பலனைக் கொடுக்கும் என்றும் இரண்டு சங்கதிகளை விதிப்பதால், இது வேறு கர்மம் என்றும் தீர்மானம். सुब्रह्मण्याह्वान மந்திரத்தில் इन्द्र என்கிற சொல்லை எடுத்துவிட்டு, அக்கினி என்கிற சொல்லைச் சேர்க்கிறதென்றும், வேறு ஒரு சொல்லையும் மாற்ற வேண்டியதில்லையென்றும் தீர்மானம் (मीमांसा.अध्या-2, पा-2, अधि-12; अध्या-9,पा-1, अधि-16).

2. अभिजित् - இது अग्निष्टोमविकृति. இதில் पृष्ठस्तोत्रமாக रथन्तरम् - बृहत् என்கிற இரண்டையும் गानம் செய்ய வேண்டுமென்று விதியிருக்கிறது. பிரகிருதியாகத்தில் இரண்டில் ஒன்றைத் தான் காநம் செய்கிறது. இரண்டையும் पृष्ठस्तोत्रங்களிலேயே गानம் செய்கிறது என்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा,अध्या-16, कण्डि-1; मीमांसा.अध्या-10, पा-6, अधि-8).

3. उपहव्यः - இது अग्निष्टोमविकृति. இதில் अश्वः श्यामो रुक्मललाटो दक्षिणा; स ब्रह्मणे देयः என்று வாக்கியங்களிருக்கின்றன. இதில் சொன்ன தக்ஷிணையே கொடுக்கவேண்டியது. வேறு தக்ஷிணை சாஸ்திரீயமானதில்லையென்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-18, कण्डि-1; मीमांसा.अध्या-10,पा-3,अधि-18).

4. ऋतपेयः - இதுவும் अग्निष्टोमவிகிருதி. இதில் தக்ஷிணை औदुम्बरः सोमचमसः (அத்திமரத்தால் செய்யப்பட்ட ஸோமரஸம் வைக்கிற சமஸம்). தீர்மானம் கீழ்யாகத்தில் சொன்னபடியே (ताण्ड्य.ब्रा.अध्या-18, कण्डि-2; अध्या-10,पा-3, अधि-19).

5. कुलायः - अग्निष्टोम விகிருதி. இதில் யஜமாநன் இரண்டு பேர்கள் - ராஜாவும், அவன் புரோஹிகனும். விதிவாக்கியத்தில் இருக்கும் ராஜபுரோஹிதௌ என்கிற சொல்லுக்கு இப்படியே அர்த்தம் பண்ண வேண்டியதென்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-19, खण्डः-15; अध्या-6, पा-6, अधि-2).

6. गोसवः - இது उक्थ्यவிகிருதி. पृष्ठस्तोत्रங்களில் रथन्तरम् - बृहत् - என்கிற இரண்டு ஸாமங்களையும் गानம் செய்யவேண்டியது. ப்ருஹத் ஸ்தோத்திரத்தைக் காநம் செய்யும்போது, யஜமாநனுக்கு அபிஷேகம் செய்கிறது - திரவியம் உடனே கறந்த பால். பிரகிருதியான அக்கிநிஷ்டோம யாகத்தில் ரதந்தரஸாமத்தை காநம் பண்ணுவதானால், பஹிஷ்பவமாநத்தில் முதல் ऋக் (प्रतिपत्) उप என்பதுள்ளதாயிருக்க வேணும். बृहत्ஸாமத்தை गानம்செய்வதாயிருந்தால், अग्र என்பதுள்ள ऋக். गोसवத்தில் இரண்டு ஸாமங்களையும் गानம் செய்யகிறபடியால், எது प्रतिपत् என்று விசாரிக்கப் பட்டது. இரண்டுமில்லையென்று தீர்மானம்.(ताण्ड्य.ब्रा.अध्या-19, खण्डः-13; मीमांसा-अध्या-10, पा-5, अधि-16).

7. बृहस्पतिसवः - இது अग्निषेटोमவிகிருதி. இதை स्थपतिसवம் என்றும் சொல்லுகிறது. யஜமாநனை மான்தோலில் உட்காரவைத்து, நெய்யினால் அபிஷேகம் செய்கிறது. பிரகிருதியான अग्निष्टोमத்தில் गानம்செய்யும் ஸ்தோத்திரங்களுக்கு பலவித छन्दसुக்களுள்ள ऋக்குகள் ஆதாரங்கள். இந்த बृहस्पतिसवயாகத்தில் गायत्रिछन्दस्सुக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, மற்ற ऋக்குகளை எடுத்துவிட்டு, அவைகளுக்குப் பதிலாக गायत्रीछन्दस्सुக்குகளைச் சேர்க்கவேண்டியது. दशतयी என்கிற இடத்திலிருந்து அவைகளைச் சேர்க்கவேண்டியதென்று தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-17, खण्डः-11; मीमांसा-अध्या-8, पा-3, अधि-6).

8. विश्वजित् - இது अग्निष्टोमவிகிருதி. இதில் ஆறு पृष्ठसामங்களும் गानம்பண்ணப்படுகின்றன. அவைகளுக்கு स्थानம் - माध्यन्दिनपवमानத்தில் रथन्तरம்; वैराजம், शाक्वरம், वैरूपம், रैवतம் पृष्ठ ஸாமங்கள்; आर्भवपवमानத்தில் बृहत् - இதற்கு उत्पत्तिविधिயில் பலன் சொல்லவில்லை. சுவர்க்கம் பலன் என்று தீர்மானம். தக்ஷிணை सर्वस्वம். அது இன்னதென்று விசாரிக்கப் படுகிறது. (ताण्ड्य.ब्रा.अध्या-16, खण्डः-4,5,6; मीमांसा-अध्या-4, पा-3, अधि-5,6,7; अध्या-6, पा-7, अधि-1 முதல் ஆறும், 10 வதும்; अध्या-7, पा-3, अधि-3; अध्या-10, पा-6, अधि-5).

9. वैश्यस्तोमः - இது अग्निष्टोमவிகிருதி. இதில் முதலாவது पृष्ठஸாமம் कण्वरथन्तरம். அதை எந்த ऋக்கில் गानம்செய்கிறதென்று விசாரித்து, அதினுடைய ऋக்கிலே (स्वयोनौ) गानம் செய்கிறதென்று தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-18, खण्डः-4; मीमांसा-अध्या-10, पा-4, अधि-24).

10. श्येनः - अग्निष्टोमவிகிருதி. விரோதிகளைக் கொல்லுவதற்காகச் செய்யப்படுகிறது. ஸாமங்களிலும், ஸாமான்களிலும் பல விசேஷங்கள் விதிக்கப்படுகின்றன. உதாரணம் - ऋत्विக்குகள் செகப்புத் துணியையும், செகப்பு முண்டாசையும் கட்டிக் கொண்டு, यज्ञोपवीतத்தை நிவீதமாய் போட்டுக் கொண்டு, வேலைகளைச் செய்ய வேண்டியது. நெய் दृतिनवनीतம் (தோலில் வெகுநாள் வைக்கப்பட்ட நெய்). இதை ஸோமயாகத்தின் எல்லா அங்கங்களுக்கு உபயோகப்படுத்துகிறதென்று தீர்மானம் (ஷட், अध्या-3, कण्डि-1; अध्या-3,पा-8, अधि-21,22).

11. सर्वस्वारः - இது अग्निष्टोमவிகிருதி. எல்லா स्तोत्रங்களிலும் निधनம் என்று சொல்லும் ஸாமத்தின் கடைசி யாகம் स्वारம். आर्भवपवमानத்தை गानம்பண்ணும் போது, யஜமாநன் புதுத்துணியால் உடம்பு முழுவதையும் மூடிக்கொண்டு, ओदुम्बरिக்குத் தென்புறமாய் தலையைத் தெற்கே வைத்துக்கொண்டு படுத்தால், உடனே இறந்துபோவானாம். யஜமாநன் இறந்துபோனாலும், யாகத்தை முடிக்க வேண்டியதென்றும்; யாகத்துக்காகச் செய்ய வேண்டியதைச் செய்யவேண்டியது என்றும், யஜமாநனால் செய்ய வேண்டியதைவிட்டு விடுகிறதென்றும் தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-17, खण्डः-12; मीमांसा-अध्या-10, पा-2, अधि-23,24).

12. साद्यःस्क्रம் - இது अग्निष्टोम விகிருதி. ஐந்து விதம். முதல் இரண்டு விதங்களில் அவபிருதம் வரையிலுள்ள எல்லா வியாபாரங்களையும் ஒரே நாளில் செய்கிறது. இவைகளில் वेदि நெல்லு பழுத்திருக்கும் வயல்; उत्तरवेदि அதைக் கண்டு முதல் பண்ணும் களம்; யூபம் கலப்பையோடு சேர்ந்த நுகத்தடி (ईषा. सोमक्रयणी கொஞ்சம் குறைய மூன்று வயதுள்ள காளைக்கன்று. सोमक्रयणी விஷயமான மந்திரத்தில் எதை மாற்றுகிறது என்று விசாரிக்கப்படுகிறது. யூபாஹுதியும், स्थाण्वाहुतिயும் கிடையாது; यूपம் खादिरமாகவே இருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை; விரோதமில்லாத - பிரயோஜநமுள்ள - யூபத்தின் ஸம்ஸ்காரங்களைச் செய்யலாம் என்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-16, खण्डः-13; मीमांसा-अध्या-9, पा-1, अधि-16; अध्या-10, पा-1, अधि-5,6; अध्या-10, पा-2, अधि-31,33).

2. அஹீநமான ஸோமயாகங்கள்.

13. अङ्गिरसां द्विरात्रம் - இதில் முதல்நாள் ज्योतिष्टोमமான अग्निष्टोमம் ; இரண்டாவதுநாள் सर्वस्तोमமான अतिरात्रம். सर्वस्तोमமாவது- बहिष्पवमानं-9; आज्यங்கள்-15; माध्यन्दिनपवमानம் - 17; पृष्ठங்கள் -21; आर्भवपवमानம் - 27; अग्निष्टोमसामம் - 33. उक्थ्यஸ்தோத்திரங்கள் முதல் இறங்கி வருகிறது - முதலாவது - 27; மற்ற இரண்டும் - 21; ராத்திரி पर्यायங்கள்-15; सन्धिस्तोत्रம் - 9. ஸவநீய பசு - 11; यूपங்கள் - 11; ரசனை - 11. இதில் षोडशिग्रहம் உண்டாவென்று விசாரிக்கப்படுகிறது. (ताण्ड्य.ब्रा.अध्या-20, खण्डः-11; अध्या-10,पा-5, अधि-13).

14. त्रिरात्रம் - अश्वमेधம் - இதில் முதல்நாள் अग्निष्टोमம்; இரண்டாவதுநாள் उक्थ्यம்; மூன்றாவது நாள் सर्वस्तोमமான अतिरात्रம். இரண்டாவது நாளில் பசு अश्वः (குதிரை). இந்த யாகத்தை ஆரம்பிப்பதற்கு ஒரு வருஷம் முன்னாலே, குதிரைக்கு ஸம்ஸ்காரங்கள் செய்து, இஷ்டப்படி போகும்படி விட்டு விடவேண்டியது. ஸஞ்சரிக்கும்போது, ஒவ்வொரு நாளும் மூன்று இஷ்டிகளைச் செய்கிறது. இவைகளுக்கு सावित्रेष्टिகள் என்று பெயர். வைகாசி மாதம் அமாவாசையில் யஜமாநன் தீக்ஷை செய்து கொள்ளுகிறான். தீக்ஷை ஏழு நாள்; உபஸத்து 12 - நாள். யூபங்கள் 21; நடுயூபம் ஆஹவநீயத்துக்குக்கிட்ட இருக்கவேண்டியது; அதின் உயரம் 21 அரத்நீ. இஷ்டகசயனத்தாலே உத்தரவேதியைச் செய்யவேண்டியது. முதல்நாள் ஸோமயாகங்கள் பத்திநீ ஸம்யாஜங்களோடு முடிகின்றன. அதின் பிறகு ராத்திரி முழுவதும் அந்நஹோமங்களைச் செய்ய வேண்டியது. கடைசி ஹோமத்தை சூரியன் உதயமான பிறகு செய்யவேண்டியது. இரண்டாவது நாளில் குதிரையை உபாகரணம் செய்யும்போது, வேறு பசுக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது. அவைகளாவன - तूपर (தூபர)ம் (கொம்பில்லாதபசு). गोमृगம் (गोவுக்கும் மானுக்கும் பிறந்தது.); 11 அங்கங்கள்; 10 अष्टादशिनी பசுக்கள்-126 चातुर्मास्यபசுக்கள்; एकादशिनीபசுக்கள்; 11 பசுக்கள். ஆக குதிரையைத்தவிர- 451 பசுக்கள். पर्यग्निकरणமான பிறகு, 11दशिनी பசுக்களை விட்டு விடவேண்டியது. அவைகள் आरण्यபசுக்கள்; अङ्गयागங்களைச் செய்யும்போது, குதிரை, तूपरம், गोमृगம் இவைகளின் अङ्गங்கள் முழுவதையும் ஹோமம் செய்யவேண்டியது. स्विष्टकृत्யாகங்களுக்கு குதிரையின் ரத்தம். அவை மூன்று யாகங்கள். காலைவேளை ஸவநத்தில் आग्रयणस्थालिயையும், उक्थ्यस्थालिயையும் ரொப்புவதற்கு நடுவில் இரண்டு ग्रहங்களைப் பிடிக்க வேண்டியது. ஒன்றை வெள்ளிப்பாத்திரத்தில்; மற்றொன்றை தங்கப்பாத்திரத்தில். அவைகளுக்கு महिमग्रहமென்று பெயர். वपाஹோமத்துக்கு முன்னாலேயும் பின்னாலேயும் அவைகளை ஹோமம் செய்யவேண்டியது. (ताण्ड्य.ब्रा.अध्या-21, खण्डः-4; का-7).

15. पञ्चशारदीयம் - இதில் முதல்நாள் अग्निष्टोमம்; அடுத்த மூன்று நாள்கள் उक्थ्यங்கள்; கடைசிநாள் अतिरात्रம். இதை ஆரம்பிப்பதற்கு முன்னாலே ஐந்து வயதுள்ள 17 ஆண் பசுக்களையும், மூன்று வயதுள்ள சினையில்லாத 17 பெண் பசுக்களையும் உபாகரணம் செய்து, पर्यग्निकरणமான பிறகு ஆண் பசுக்களை விட்டு விட்டு, பெண் பசுக்களை संज्ञपनம் செய்யவேண்டியது. இது முதல் வருஷத்தில். இப்படியே அடுத்த மூன்று வருஷங்களிலும். ஐந்தாவது வருஷத்தில் - பசுயாகங்கள் எந்த காலத்தில் செய்யப்பட்டனவோ - அதே காலத்தில் ஸோமயாகத்தைச் செய்கிறது. ஸவநீய பசுக்கள் 17. முதல் நாலு நாள்களில் மூன்று மூன்று பசுக்கள்; கடைசி நாளில் ஐந்து. முதல் நாலு வருஷங்களில் விட்டு விட்ட ஆண் பசுக்களை ஐந்தாவது வருஷத்தில் கொண்டு வந்து संज्ञपनம் பண்ணுவதில்லை என்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-21, खण्डः-14; अध्या-11, पा-2, अधि-13).

16. जनकसप्तरात्रம். இதில் வரிசையாய் अग्निष्टोमம், மூன்று उक्थ्यங்கள், विश्वजित्; महाव्रतம்; ज्योतिष्टोमமான अतिरात्रம். முதல் நாலு நாள்களிலும் எல்லா ஸ்தோத்திரங்களுக்கு ஸ்தோமம் 9. இவைகளை द्वादशाहம் போல் செய்யவேண்டியது; ஸ்தோமம் மாத்திரம் மாற்றப்பட்டது என்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-22, खण्डः-9; अध्या-8; पा-3, अधि-2).

17. एकादशरात्रம் - இதில் பதினொரு सुत्याहस्सुக்கள். दक्षिणै अयुतம் अश्वसहस्रம் एकादशம் (பதினாயிரம் பசுமாடுகளும் ஆயிரம் குதிரைகளும்; இதைப் பதினொன்றாலே பெருக்க வேண்டியது). இந்த தக்ஷிணை ஒன்று என்றும், அதைப்பிரித்து ஒவ்வொருநாளும் கொடுக்க வேண்டியதென்றும் தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-22, खण्डः-17; अध्या-10, पा-6, अधि-17,18).இதைப் பௌண்டரிகமென்றும் சொல்லுகிறது.

3. सत्रமான ஸோமயாகங்கள்.

18. पञ्चदशरात्रம் - இதில் வரிசையாய் त्रिवृत् अग्निष्टुत् अग्निष्टोमம்; त्रिरात्रம் (ज्योतिः, गौः आयुः) என்கிற மூன்று நாள்கள்; दशरात्रம்; अतिरात्रம், सत्रங்களுக்கு முதலிலும் கடைசியிலும் अतिरात्रமுண்டு; अहीநத்துக்கு முதலிலாவது கடைசியிலாவது தான். ஆகையால் இந்த पञ्चदशरात्रம் अहीநமா என்று சந்தேகம்வர, सत्रம்தான் என்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-23, खण्डः-8; अध्या-8, पा-2, अधि-6).

19. षट्त्रिंशद्रात्रம் - இதில் முதலிலும் கடைசியிலும் अतिरात्रங்கள்; நடுவில் நாலு अभिप्लवषडहங்களும், दशरात्रமும். விதி வாக்கியத்தில் षडहा भवन्ति - चत्वारो भवन्ति என்று இருப்பதைக் கொண்டு சந்தேஹம் - षडहம் ஆறு நாள்கள். அப்படி நாலு षडहங்கள்; ஆக 24 நாள்கள்; இவைகளை द्वादशाहத்தைப் போல் இரண்டு தடவை செய்கிறதா என்று. षडहம் என்பது ஆறு நாள்களில் செய்யப்படும் ஒரு கர்மம்; அதை நாலு தடவை செய்யவேண்டியதென்று தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-24, खण्डः-6; अध्या-8, पा-3, अधि-3).

20. एकोनपञ्चाशद्रात्रम्- இதில் 49 सुत्याहस्सुக்கள் सत्रத்தைச் செய்கிறவர்கள் अञ्जनமும், अभ्यञ्जन மும் செய்து கொள்ளவேண்டியது. அதற்கு திரவியம்- प्रतः ஸவநத்தில் गौल्गुलवम्; माध्यन्दिन ஸவநத்தில் सौगन्धिकम्; तृतीय ஸவநத்தில் पैतुदारம். பிரகிருதியான अग्निष्टोमத்தில் अभ्यञ्जनத்துக்கு திரவியம் நவநீதம். இதற்குப் பதிலாக சொன்ன திரவியங்கள் விதிக்கப்படுகின்றனவா என்று சந்தேகம் இல்லை என்று தீர்மானம். (ताण्ड्य.ब्रा.अध्या-24, खण्डः-13; अध्या-10, पा-4. अधि-7). 4. गवामयन விகிருதிகள்.

21. कुण्डपायिनामयनம் - இதில் ஒரு மாஸம் दीक्षै; 12 நாள் उपसத்துக்கள். அவைகள் முடிந்தவுடன் ஒரு மாஸம் अग्निहोत्रத்தைச் செய்கிறது; ஒரு மாஸம் தர்ச-பூர்ணமாஸம்; நாலு மாசங்களில் चातुर्मास्यத்தின் நாலு पर्वाக்கள் - ஒவ்வொரு மாசத்தில் ஒரு पर्व. இப்படி முன் ஆறு மாசங்கள் முடிந்தபின், பின் ஆறு மாசங்கள் ஸோமயாகம். सत्रத்தைச் செய்கிறவர்கள் कुण्डம் என்கிற चमஸங்களால் ஸோமரஸத்தைப் பக்ஷணம் செய்ய வேண்டியது. (ताण्ड्य.ब्रा.अध्या-25, खण्डः-4).

22. सारस्वतसत्रம் - இதில் முதல் நாளும் கடைசி நாளும் अतिरात्रம். இரண்டாவது நாள் முதல் தர்ஶ இஷ்டியில் சேர்ந்த सान्नाय्य யாகங்களை ஒவ்வொரு நாளும் செய்து, பௌர்ணமியில் गौः என்கிற एकाह ஸோமயாகத்தைச் செய்கிறது. பிறகு பூர்ணமாஸ இஷ்டியை अमावास्यै வரையில் செய்து. அன்றைக்கு आयुस् என்கிற एकाह ஸோம யாகத்தைச் செய்கிறது. இப்படியே மேல்மேலும் செய்து, கடைசியில் அதிராத்திரத்துடன் முடிக்கவேண்டியது. இதைச் செய்யுமிடம் - सरस्वती என்கிற ஆறு கிழக்கே இருந்து மேற்கே ஓடுகிறது. அதினுடைய முதல் பாகமும் கடைசி பாகமும் எல்லாருக்கும் தெரியும். நடுவில் பூமிக்குள்ளே ஓடுகிறது. அப்படித் தெரியாமல் ஓட ஆரம்பிக்கும் இடத்துக்கு विनशनம் என்று பெயர். அங்கே தீக்ஷையை பண்ணிக் கொள்ளுகிறது. தீக்ஷை 12 நாள்கள்; உபஸத்து 12 நாள்கள். ஸோமயாகம் பௌர்ணமியில் வரும்படி தீக்ஷையை ஆரம்பிக்கவேண்டியது. அங்கிருந்து ஸரஸ்வதியின் கரையுடன் கிழக்கே போய்க்கொண்டே இருக்கவேண்டியது. அக்கினிகளுக்கு இடம் - ஆஹவநீயத்துக்குக்கிட்ட கிழக்கு முகமாய் இருந்து கொண்டு, அத்வர்யு शम्या என்னும் தடியை கூடிய வேகத்துடன் எறியவேண்டியது. அது விழுகிற இடம் கார்ஹபத்தியத்தின் இடம். அதற்கு 36 प्रक्रमத்தின் கிழக்கே ஆஹவநீயத்துக்கு இடம் सदसुம். ஹவிர்தாநமும், ஆக்கினீத்திர மண்டபமும் வண்டி சக்கிரம்போல இருக்கவேண்டியது. यूपம் உரலைப்போலே பருத்ததாய் இருக்க வேண்டும். பள்ளம் கல்லி அதை நடவேண்டியதில்லை. சுற்றிலும் மண்ணைக்கு வித்தால் போதும். உபரவங்களைக் கல்ல வேண்டியதில்லை. सरस्वती உண்டாகுமிடத்துக்கு प्रस्रவணம் என்று பெயர். அதைச் சேர்ந்தவுடன் இந்த யாகம் முடிகிறது. அப்போது காமனான அக்கிநிக்கு ஒரு இஷ்டியைச் செய்கிறது. அதற்கு தக்ஷிணை ஒரு பெண் குதிரையும், ஒரு வேலைக்காரியும் (पुरुषी;) இரண்டு புதிதாய் கன்று போட்ட கன்றுள்ள பசுமாடுகளும். இந்த தக்ஷிணை अदृष्टार्थமென்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-25,खण्डः-10; अध्या-10, पा-2, अधि-15).

23. शाक्यानामयनம் - இந்த யாகத்தில் ஸோமயாகங்களுக்கு ஸ்தோமம் - ஒன்பது வருஷங்களுக்கு 15; ஒன்பது வருஷங்களுக்கு 17; கடைசி ஒன்பது வருஷங்களுக்கு 21. இந்த யாகத்தைப் பற்றி ஒரு வாக்கியம் - ஒவ்வொரு நாளும் ஸோமயாகங்கள் ஆனபிறகு गृहपति வேட்டைக்குப்போகிறான்; எந்த மிருகங்களைக் கொல்லுகிறானோ, அவைகளின் மாம்சம் ஸவநீய புரோடாசங்கள் ஆகின்றன என்று. ஸவநீய புரோடாசத்தை மாத்திரம் மாம்சத்தால் செய்கிறது என்றும், மாம்சத்தை அறைக்கும் போது (पेषणம்), மந்திரத்தில் धान्यம் என்கிற சொல்லை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக माम्सम् என்கிற சொல்லைச் சேர்க்க வேண்டியதென்றும் தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-25, खण्डः-7; मीमांसा-अध्या-3; पा-8, अधि-23; अध्या-9, पा-1, अधि-13).

24. विश्वसृजामयनம் - இதில் ஆயிரம் सम्वत्सरங்கள் सुत्याஹஸ்ஸுக்கள். அவைகளில் 250 - இல் स्तोमம் 9; 250-இல் 15; 250-இல் 17; கடைசி 250-இல் 21. இதில் सम्वत्सरம் என்கிற சொல்லுக்கு நாள் அர்த்தமென்று தீர்மானம் (ताण्ड्य.ब्रा.अध्या-25, खण्डः-18, अध्या-6, पा-7, अधि-13).

Go Top